Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள் தமிழக அரசு சார்பில் புதிய டிவி சேனல் ! கோவில் நிகழ்ச்சிகள் மட்டும் ஒளிபரப்பப்படும்..

தமிழக அரசு சார்பில் புதிய டிவி சேனல் ! கோவில் நிகழ்ச்சிகள் மட்டும் ஒளிபரப்பப்படும்..

783
0
tempel
Temple of Sri Ranganathaswamy in Trichy Tamil Nadu state South India.
Share

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளும், ஆன்மீக தகவல்களையும் ஒளிபரப்ப திருக்கோவில் என்ற பெயரில் ஒரு புதிய சேனலை தொடங்க இந்து சமய நலத்துறை சார்பில் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
சமய அறநிலை துறை சார்பில் சமயக் கொள்கைகளைப் பரப்பவும் கடைப்பிடிக்கவும் ஒரு தொலைகாட்சி வேண்டும் என்று இதற்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இடம் கோரிக்கை வைத்திருந்தனர். அதன் அடிப்படையில் தற்போது எடப்பாடி பழனிசாமி அவர்கள் நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஒரு புதிய தொலைக்காட்சி தொடங்கிடத் தமிழக அரசு சார்பில் 8.77 கோடி ரூபாய் செலவில் திருக்கோவில் என்ற புதிய சேனல் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
tamilnaduஅது மட்டுமின்றி திருக்கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முன்னேற்பாடுகள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
திருக்கோவில் தொலைக்காட்சி ஒரு நாள் முழுவதும் இடைவிடாது நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தேவையான படக் காட்சிகள் தற்போது அனைத்து முக்கிய கோவில்களிலும் ஒளிப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு படப்பிடிப்பு ஒளிப்பதிவு செய்யத் தேவையான நடைமுறைகளைக் கோவில் வழிகாட்டுதலின்படி கடைப்பிடிக்க வேண்டும் என்று  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here