Home செய்திகள் இந்தியா அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் கண்காணிக்க புதிய சாப்ட்வேர்..

அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் கண்காணிக்க புதிய சாப்ட்வேர்..

284
0
anna university
Share

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் என அனைத்தும் மார்ச் மாதம் முதல் மூடபட்டது. இதனால் பருவத் தேர்வுகளை நடத்த முடியாமல் இறுதி ஆண்டு மாணவர்களை தவிர அனைவருக்கும் ஆல் பாஸ் வழங்கப்பட்டது. ஆனால் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்தியே தீரவேண்டும் என்று பல்கலைக்கழகம் முடிவு செய்தது. இதனால் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் ஆன்லைன் வாயிலாக தேர்வு நடத்தலாம் என்று முடிவெடுத்தனர்.

எனவே இறுதி ஆண்டு மாணவர்கள் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் இந்த தேர்வில் பங்கேற்கின்றனர். இந்த தேர்வு நாளை துவங்குகிறது. இந்த தேர்வுகள் அனைத்தும் போட்டித்தேர்வுகள் போன்று சரியான விடையை தேர்ந்தெடுத்து பதிலளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. எனவே இந்த தேர்வுகளை மொபைல்போன், கம்ப்யூட்டர்.டேப்லெட் போன்ற சாதனங்கள் வாயிலாக தேர்வு எழுதலாம் என்றும் தெரிவித்துள்ளது.

பிரௌசர்களுக்கு போட்டியாக ஜியோபிரவுசர் செயலி!

ஒரு மணி நேர தேர்வை கண்காணிப்பதற்காக புதிய சாப்ட்வேர் ஒன்றை பயன்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஏனென்றால் ஆள்மாறாட்டம் செய்யாமல் இருக்கவும், புத்தகங்கள், குறிப்புகள் போன்றவற்றை கொண்டு காப்பி அடிக்காமல் இருப்பதற்காகவும், தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடக்காமல் இருக்க செயற்கை நுண்ணறிவு வகையைச் சார்ந்த சாப்ட்வெர் ஒன்றை கொண்டு இந்த தேர்வு நடந்தி முடிக்கும் வரை கண்காணிப்பதற்காக பயன்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர். மாணவர்களின் கண்விழி அசைவையும் இந்த சாஃப்ட்வேர் கண்காணித்து தேர்வு அதிகாரிகளிடம் தெரிவிக்கும் என்று கூறுகின்றனர்


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here