Home செய்திகள் இந்தியா பிரௌசர்களுக்கு போட்டியாக ஜியோபிரவுசர் செயலி!

பிரௌசர்களுக்கு போட்டியாக ஜியோபிரவுசர் செயலி!

317
0
Share

சீன செயலிகள் தடைக்குப் பிறகு இந்தியச் செயலிகளின் வருகை அதிகரித்துள்ளது. அதனடிப்படையில் கூகுள் க்ரோம், மைக்ரோசாப்ட் எட்ஜ், ஒபேரா உள்ளிட்ட பிரவுசர்களுக்கு போட்டியாகவும் UC பிரவுசருக்கு மாற்றாகவும் ஜியோபிரவுசர் தற்போது வெளியாகியுள்ளது. ஆன்டிராய்ட் தளங்களுக்கு மட்டும் ஜியோ பிரவுசர் பீட்டா பதிப்பை முதற்கட்டமாக ரிலையன்ஸ் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த பிரவுசரை கூகுள் ப்ளே ஸ்டோரில் வாயிலாக டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.

சீன செயலிகளைத் தடை விதித்த பிறகு மத்திய அரசு, இந்தியச் செயலிகளை ஊக்குவித்து வருகிறது. எனவே ஜியோபிரௌசர் இந்திய இணையப் பயனர்களின் தேவைகளையும் தேடல்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்யும் அத்தனை அம்சங்களையும் கொண்டுள்ளது. சீன செயலியான யூசி பிரவுசர் தடை செய்யப்பட்டுள்ளதால் இந்த ஜியோபிரௌசர் பயனர்களின் தேவையை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் ஜியோபிரவுசர் களம் இறங்கியுள்ளது.

ஜியோ போஸ்ட்பெய்டு பிளஸ் சிறப்பு திட்டங்கள் 399 ரூபாய் முதல் 1,499 வரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜியோபிரவுசரின் முக்கிய அம்சமாகப் பாதுகாப்பு வசதிகளுடன் பிரவுஸ் செய்யும் வசதி இணைக்கப்பட்டுள்ளது. அடிக்கடி பார்க்கும் இணையதளங்களை எளிமையாக அணுகவும், வீடியோக்களை துல்லியமாகப் பார்க்கவும், கேம்களை விளையாடவும் ஏதுவாக ஜியோபிரவுசர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜியோவின் இந்த செயலி மூலம் இந்தியாவில் எளிதாகப் பிரபலமடையமுடியும் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நம்புகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here