Home செய்திகள் இந்தியா TRAI வெளியிட்ட புதிய திட்டம் ! இனி விரும்பிய டி.வி சேனல்கள் பார்க்கலாம் ..

TRAI வெளியிட்ட புதிய திட்டம் ! இனி விரும்பிய டி.வி சேனல்கள் பார்க்கலாம் ..

319
0
TRAI
Share

TRAI வாடிக்கையாளர்களுக்கு புதிய செயலி ஒன்றை அறிவித்துள்ளது. அதில் வாடிக்கையாளர்களுக்கு விரும்பிய  டி.வி சேனல்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக 2 வருடத்திற்கு முன்பே அறிவித்திருந்தது. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு அது திருப்திகரமாக இல்லை என்று தெரிவித்திருந்தனர். இதனால் இந்த புது செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இதில் தங்களுக்குத் தேவையான சேனல்கள் மட்டும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் மற்றவை தானாகவே  விலகிவிடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி DTH மற்றும் MSO போன்றவற்றுடன் சேர்ந்து இந்த செயலி செயல்படுகிறது. எந்த ஒரு சேனலும் தேர்ந்தெடுத்த பிறகு அதன் முழு விவரப் பட்டியல் ஒரு பக்கமாக வந்துவிடும்.
அதற்கான விலைப் பட்டியல் தோன்றிய பிறகு நாம் சாந்த தொகையைச் செலுத்திக் கொள்ளலாம். மற்ற தேவையற்ற சேனல்கள் தானாகவே பட்டியலை விட்டு வெளியேறிவிடும் என்று  TRAI தரப்பில் கூறியுள்ளனர்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here