Home செய்திகள் இந்தியா சிறிய நிறுவனங்களில் அதிக வேலைவாய்ப்பு !

சிறிய நிறுவனங்களில் அதிக வேலைவாய்ப்பு !

348
0
Share

வரும் 3 ஆண்டுகளில் 3 சதவீத நிறுவனங்கள் மட்டுமே புதிதாக ஊழியர்களை பணியமர்த்தும் முடிவில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேன்பவர் கிரிட் நிறுவனம், பணியமர்த்தும் முடிவுகள் குறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டது இந்த ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது :

இந்தியா முழுவதும் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் ஆண்டின் இறுதி காலாண்டில் மிகுந்த எச்சரிக்கையுணர்வுடன்ஆட்களை பணியில் அமர்த்த நிறுவனங்கள் ஆலோசனை செய்து வருகின்றன. அதிலும் 3 சதவீத நிறுவனங்கள் மட்டுமே புது ஊழியர்களை பணியமர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இது 15 ஆண்டுகளில் இல்லாத நிலையாகும். அதைத் தொடர்ந்து ஊதிய உயர்வில் 7 சதவீத நிறுவனங்கள் மட்டுமே திட்டமிட்டுள்ளது. 3 சதவீத நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தைக் குறைக்கவும் முன்வந்துள்ளது. 56 சதவீத நிறுவனங்கள் எந்தவித மாற்றமும் இல்லாமல் வேலை வழங்க முடிவு எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் 5ஜி மொபைல்! மக்களிடம் வரவேற்பைப் பெறுமா ?

வேலை வழங்கும் எண்ணம் சிறிய நிறுவனங்களில் அதிகமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதே போல நடுத்தர நிறுவனங்களும் ஓரளவிற்கு வேலைவாய்ப்பு வழங்க முன்வந்துள்ளது. ஆனால் மிகப் பெரிய நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அளிக்க யோசிப்பதாக இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

அதிலும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் அதிகமாக இந்த எண்ணம் தான் இருப்பதாகவும் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் மிகக்குறைந்த எண்ணத்தோடு இருப்பதாக ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here