Home செய்திகள் இந்தியா கொரோனாவை கண்டறியும் நவீன ஹெல்மெட் மும்பையில் அறிமுகம்…

கொரோனாவை கண்டறியும் நவீன ஹெல்மெட் மும்பையில் அறிமுகம்…

367
0
Share

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து உலகம் முழுவதும் பல்வேறு வகையில் சோதனைகளை நடத்தி வருகின்றனர். அதிலும் பெரும்பாலும் சோதனை நடத்தப்படும் போது மனிதரின் டெம்பரேச்சர் எனப்படும் உடல் வெப்ப நிலையைத் தான் முதலில் சோதனை செய்கின்றனர்.

இதில் இத்தாலி, துபாய், சீனா போன்ற நாடுகள் டெம்பரேச்சர் சோதனை செய்வதற்கு ஸ்மார்ட் ஹெல்மெட்டை பயன்படுத்தினர். தற்போது இந்த கொரோனா சோதனை முறை மும்பையில் பயன்படுத்தப்படுகின்றது. நாளுக்கு நாள் மும்பையில் கொரோனா தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே இந்த முறையைக் கையில் எடுத்துள்ளது. எதற்காக இந்த ஹெல்மெட்டை வாங்கப்பட்டுள்ளது இதில் என்ன சிறப்பு என்றால் இந்த ஸ்மார்ட் ஹெல்மெட் மூலம் எளிதில் உடல் வெப்பநிலையைக் கண்டறிய முடியும்.

ஏற்கனவே இந்த ஹெல்மெட் கொண்டு ஒரு நிமிடத்தில் 300 உடல் வெப்பநிலையைப் பரிசோதனை செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு கூட்டத்தில் ஒரு நிமிடத்தில் 300 பேருக்கு இந்த ஹெல்மட்டை கொண்டு வெப்ப நிலையைக் கண்டறிய முடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் இந்த நவீன ஹெல்மெட் மும்பை, பூனே ஆகிய இடங்களுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்தியாவில் இந்த இரண்டு இடங்களில் தான் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதாம். இந்த நவீன ஹெல்மெட் விலை 6 லட்சமாம். இது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாம்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here