Home செய்திகள் இந்தியா தடை செய்யப்பட்ட ஆப்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை…

தடை செய்யப்பட்ட ஆப்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை…

344
0
TikTok Banned
Share

இந்தியா – சீனா இடையே லடாக் எல்லைப் பகுதியில் சில வாரங்களுக்கு முன் ஏற்பட்ட சண்டை காரணமாக இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் பலியாகினர். அதைத் தொடர்ந்து இரு நாடுகளிடையே போர் மூளும் வகையிலிருந்தது. இறுதியில் பேச்சு வார்த்தையில் சுமுகமாக முடிவு கிடைத்தது. அதைத் தொடர்ந்து சீன நாட்டுடன் தொடர்புடைய மொபைல் செயலிகளை இந்தியாவில் பயன்படுத்தத் தடைவிதிக்கப்பட்டது.

அதில் பெரிதும் பயன்படுத்தப்பட்ட டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், வி-சாட், யூ-கேம், கேம் ஸ்கேனர், க்ளீன் மாஸ்டர், வீ-சாட் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு அதிரடியாகத் தடை என மத்திய அரசு அறிவித்தது.

பின்னர் மத்திய அரசின் தடை புதிதாக இந்த செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய மட்டுமே. பழைய பயனர்கள் தொடர்ந்து செயலியைப் பயன்படுத்தலாம் என்று வதந்திகள் பரவிய வண்ணம் இருந்தது. ஆனால் இதற்கும் தற்போது பலமான பதிலடி கொடுத்துள்ளது மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம்.

இது தொடர்பாகத் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளதாவது :
பாதுகாப்பு காரணங்கள் கருதி சீனாவின் 59 செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ள இந்த நேரத்தில், அவை பதிவிறக்கம் செய்யக் கிடைத்தாலோ அல்லது அவற்றை வேறு ஏதாவது வழியில் பயன்படுத்தினாலோ, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here