Home டெக்னாலஜிஸ் AUTOMATION கொரோனா நோயாளிகளை அடையாளம் கண்டு சேவை புரியும் மித்ரா ரோபோ..

கொரோனா நோயாளிகளை அடையாளம் கண்டு சேவை புரியும் மித்ரா ரோபோ..

442
0
Share

இன்றைய காலத்தில் கொரோனா நோய்த்தொற்று மிகப்பெரும் பிரச்சனையாக விளங்கி வருகிறது இதனால் உலகம் முழுவதும் பெரிய பொருளாதார சரிவும் உயிரிழப்பு ஏற்பட்டது.இந்த நோய்க்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் உட்பட அனைவரும் இந்நோயினால் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் குடும்பமே அருகில் வந்து சேவை செய்யப் பயப்படுகிறது.

இந்த நேரத்தில் ரோபோவை கொண்டு சிகிச்சை அளிக்கும் புதிய முயற்சியில் பிரபல மருத்துவமனை களமிறங்கியுள்ளது. நொய்டா பகுதியில் உள்ள யாதார்த் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மித்ரா என்ற ஒரு ரோபோட்டை சிகிச்சை அளிப்பதற்கும் சேவை புரிவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியில் மித்ரா என்றால் நண்பர் என்று பொருள்.

இந்த ரோபோட் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உடன் நேரடியாகப் பேசி பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

இந்த ரோபோட்டின் சிறப்பம்சம் ஆனது அதன் கண்களில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அந்த கேமரா வாயிலாக நோயாளிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது மட்டுமில்லாமல் முன்னர் தொடர்பு கொண்ட நபர்களை மிக எளிதில் நினைவு படுத்தி அவர்களுக்குத் தேவையான சேவையை மிக எளிதில் செய்து விடுகிறது. மேலும் இதன் மார்பின் டேப்லெட் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நோயாளிகளின் குடும்பத்தாரையும், சிகிச்சையாக்கும் மருத்துவரையும் தொடர்பு கொள்ள வழிவகை செய்கிறது. இதன் மூலம் நோயாளிகளிடம் மருத்துவர்கள் ஆன்லைன் வாயிலாகத் தொடர்பு கொண்டு உரையாடி சிகிச்சை அளிக்க முடியும் அந்த மருத்துவமனை தெரிவிக்கின்றது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்கள் முடங்கின ! பயனர்கள் அதிர்ச்சி.

பெங்களூரைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான இன்வென்டோ ரோபாட்டிக்ஸ் என்ற நிறுவனம் தான் இந்த மித்ரா ரோபோட்டை தயாரித்தது. இந்த மித்ரா ரோபோடை தனியார் மருத்துவமனை 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாக அந்த மருத்துவமனை நிர்வாக இயக்குனர் யாதார்த் தியாகி தெரிவித்துள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here