Home லைஃப் ஸ்டைல் ஆரோக்கியம் மருத்துவ குணம் வாய்ந்த சுண்டைக்காய்..

மருத்துவ குணம் வாய்ந்த சுண்டைக்காய்..

695
0
sundakkai
Share

சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, என முழுத்தாவரமும் மருத்துவ குணம் கொண்டது. இதன் இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் வல்லது. காய்கள் கல்லீரல் மற்றும் கணையம் சம்மந்தமான வியாதிகளுக்கு மருந்தாகிறது. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.

சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இரண்டு வகை உண்டு. மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகமாக காணப்படுவது காட்டுச்சுண்டை என அழைக்கப்படுகிறது. இவை பெரும்பாலும் வற்றல் செய்ய பயன்படுகிறது.

இந்த சுண்டைக்காய் வற்றலை பொடி செய்து தினமும் ஐந்து கிராம் பொடியை வெறும் வயிற்றில் காலையில் உண்டு வந்தால் உடல் பருமன் மளமளவென குறையும். சுண்டைக்காயை அடிக்கடி சமையலில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை ஏற்படாது.sundakkai

சுண்டைக்காய் வற்றல் செய்முறை:

முதலில் சுண்டைக்காயை நீரால் சுத்தம் செய்து பின் அதனை வெட்டி கொதிக்கும் நீரில் ஐந்து நிமிடம் போட்டு பின்பு நீரை வடிக்க வேண்டும். ஒரு நாள் முழுவதும் அதை மோரில் ஊற வைக்க வேண்டும். அடுத்த நாள் சுண்டைக்காயை மட்டும் வடித்து எடுத்து வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும். பகலில் இரண்டையும் காய வைத்து இரவு முழுவதும் மோரில் சுண்டைக்காயை ஊற வைக்க வேண்டும், இப்படி நான்கு நாட்கள் வற்றலாக நன்கு காயும் வரை காய வைக்க வேண்டும்.

சுண்டைக்காய் வற்றல், சீரகம், சோம்பு ஆகிய மூன்றையும் ஒரே அளவு எடுத்து அரைத்து தினமும் காலை, மாலை என இரு வேளை தலா இரண்டு கிராம் சாப்பிட்டால் தைராய்டு கோளாறுகள் குணமாகும். சுண்டைக்காய் வற்றலுடன் மாதுளை ஒடு சேர்த்து அரைத்து தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுப்படும்.

சுண்டைக்காய் வற்றல் மற்றும் ஒமம் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் காலையில் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் குடல் பூச்சிகள் நீங்கும்.

சுண்டை வற்றல் உடன் கறிவேப்பிலை, மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை சம அளவு எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு தேக்கரண்டி உணவுடன் மூன்று வேளை சாப்பிட்டால் பசியின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் ஆகியன குணமாகும்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here