Home செய்திகள் இந்தியா தமிழக அரசின் அடுத்த அதிரடி ! பொது போக்குவரத்து இயக்கும் திட்டம்….

தமிழக அரசின் அடுத்த அதிரடி ! பொது போக்குவரத்து இயக்கும் திட்டம்….

464
0
tamilnadu
Share

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தொடர்ந்து மே 17 வரை  ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று (மே 11) முதல் கட்டுப்பாடுகளுடன் சில வர்த்தக நடவடிக்கைகளுக்குத் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து   பொது போக்குவரத்து செயல்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக மாநில அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
govt buses
ஊரடங்கு முடிந்து வெளியே வரும் போது அனைவரும் உரியச் சரீர இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இதே போல் பொது போக்குவரத்தான பேருந்துகள், ரயில்களிலும், ஆட்டோ போன்றவற்றிலும் போதிய இடைவெளி விட்டுக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்று தெரிகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்துக் கழகங்கள் கடந்த வாரம் தங்கள் ஊழியர்களுடன் ஆலோசனை  நடத்தியது. இது குறித்து அனைத்து  கழகங்களுக்கும் மாநில போக்குவரத்து செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில் ஆரம்பத்தில் குறைந்தளவில் பேருந்துகளை இயக்குதல், மக்கள் தேவைக்கேற்ப பேருந்துகள் busesஇயக்குதல், பயணிகளை எவ்வாறு அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகள் இடம்பெற்றுள்ளன. அதாவது சென்னை மாநகரப் பேருந்துகளில் ஒரு பேருந்திற்கு 25 பேர் மட்டும் அனுமதிக்கப்பட வேண்டும்.
அதிலும் 20 பேர் போதிய இடைவெளி விட்டு அமர்ந்த நிலையிலும் 5 பேர் நின்று கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படுவர். இருக்கைகள் 50 சதவீதம் மட்டும் நிரம்பியிருக்குமாறு நடத்துநர்கள் அவ்வப்போது உறுதி செய்து கொள்ள வேண்டும். புறநகர் ரயில்களில் ஒரு பெட்டிக்கு 50 பேர் மட்டும் பயணிக்கலாம்.
மெட்ரோ ரயிலில் ஒரு ரயிலுக்கு அதிகபட்சம் 160 பேர் வரை பயணிக்கலாம். ஆட்டோவில் ஒரு பயணியும், வாடகை கார்களில் பின் இருக்கையில் இருவர் மட்டும் அமர அனுமதிக்கப்படுவர். ஆனால் பேருந்துகள் அல்லது ரயில்கள் தாமதமாக வரும் நேரத்தில் கூட்ட நெரிசலை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று அதிகாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதுதொடர்பாக நடத்துநர் அருணகிரிநாதன் கூறுகையில், பேருந்து நிலையங்களில் கூட்டங்களைக் கையாள்வது மிகவும் சிரமமான விஷயம். நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்தால் எங்களின் பேச்சை யாருமே கேட்க மாட்டார்கள். அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறி விடுவார்கள் என்றார். இதேநிலை தான் ரயில்களுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தற்போது சென்னையில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாளிலிருந்து ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. அதில் 7 முதல் 10 பேர் வரை ஏறிச் செல்கின்றனர். இவர்களுக்கு எவ்வாறு விதிமுறைகளை வகுத்து நடைமுறைப்படுத்துவது என்று தெரியவில்லை என்று மாநில அரசின் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here