Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள் தமிழகத்தில் மே 11 முதல் தளர்வுகள் ! டீ கடைகள் இயங்கலாம்…

தமிழகத்தில் மே 11 முதல் தளர்வுகள் ! டீ கடைகள் இயங்கலாம்…

462
0
EPS
Share

தமிழக அரசு பொருளாதார நிலையை மேம்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் எடுத்துள்ளது.

ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளுடன் சில தளர்வுகள் எடுத்துள்ள நிலையில் மேலும் சில முடிவுகள் மேற்கொண்டுள்ளது தமிழக அரசு.

அதில் தமிழகம் முழுவதும் (நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) கீழ்க்காணும் பணிகள், 11-ம் தேதி திங்கள்கிழமை முதல் குறிப்பிடப்பட்ட நேரத்தில், மத்திய அரசு அறிவித்த விதிகளின் கீழ் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் சார்ந்த கடைகள் சென்னை மாநகராட்சி பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம். மற்ற கடைகள் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம்.

மற்ற அனைத்து பகுதிகளிலும், காய்கறிகள், மளிகைப் பொருட்கள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையும் மற்ற அணைத்து கடைகளும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும்.Tea shop

சென்னை மாநகராட்சி உட்பட தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் (நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) டீ கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும்.
* டீ கடைகளில் சமூக இடைவெளியை கட்டாயம் கடை பிடிக்க வேண்டும்.
* மேலும், ஒரு நாளைக்கு குறைந்தது 5 முறையாவது கிருமிநாசினி தெளித்து, கடையை சுத்தமாகவும் சுகாதரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.
* டீ கடையில், வாடிக்கையாளர்கள் ஏதும் உட்கொள்ள அனுமதி இல்லை.
* இதை முறையாக கடைபிடிக்க தவறினால் அந்த கடைகள் உடனடியாக மூடப்படும்.

பெட்ரோல் பம்புகள் சென்னை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையும், மற்ற அனைத்து பகுதிகளிலும், காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.Petrol,Diesel Chennai
* தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பம்புகள் 24 மணி நேரமும் செயல்படும்.

சென்னை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம் எனவும் பிற மாவட்டங்களில் அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் மாலை7 மணி வரை செயல்படும்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும், தனியார் நிறுவனங்களும் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது என அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here