Home அறிவியல் செவ்வாய்க் கிரகத்தில் உங்கள் பெயர் ! நாசா புது திட்டம்…

செவ்வாய்க் கிரகத்தில் உங்கள் பெயர் ! நாசா புது திட்டம்…

481
0
Nasa
Share

அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா செவ்வாய்க் கிரகத்துக்கு வரும் 2026 ஆம் ஆண்டு ஒரு புதிய விண்கலத்தை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. அந்த விண்கலம் செவ்வாய்க் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான ஆதாரத்தைக் கண்டறியும் விண்கலம் ஆக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
இந்த விண்கலத்தில் தங்கள் பெயர்களை இலவசமாகப் பொறிக்கப்படும் என்று வாய்ப்பளித்துள்ளது. இந்த பெயர் பதிக்கும் திட்டத்திற்கு இது வரை மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர்.
இந்த  https://mars.nasa.gov/participate/send-yourname/mars2020/ என்ற இணையதளத்தில் தங்கள் பெயரைப் பதிவு செய்தால் தங்கள் பெயரானது விண்கலத்தில் பதிக்கப்படுமாம். அது மட்டுமின்றி பதிவு செய்த  அனைவருக்கும் ஒரு விமான பயணச்சீட்டைப் பரிசளிக்க முன் வந்துள்ளது.
எலக்ட்ரான் கதிர்வீச்சைக் கொண்டு இந்தப் பெயர்களை விண்கலத்தில் சிலிகான் சிப்பில் பதிக்கப்படும் என்று விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மக்களிடையே விண்வெளி ஆராய்ச்சி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக  அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது ஊரடங்கு என்பதால் பள்ளி மாணவர்களிடையே இந்த விழிப்புணர்வு சென்றடையப் பள்ளி ஆசிரியர்கள் வாயிலாகக் கொண்டு சேர்க்க  அறிவுறுத்தியுள்ளது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here