Home செய்திகள் இந்தியா மெரினா மறைந்துவிடும் ! ஐஐடி ஆய்வு…

மெரினா மறைந்துவிடும் ! ஐஐடி ஆய்வு…

378
0
Share

தமிழகத்தில் தற்போது பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பருவநிலை மாற்றம் போது மாபெரும் வெள்ளப்பெருக்கு பேரிழப்பு சென்னைக்கு ஏற்பட்டது. இது போல் எதிர்காலத்தில் மழை காரணமாக இந்தியாவின் கடலோர மாவட்டங்கள் எவ்வாறு பாதிப்பிலிருந்து மீள்வது என்பது குறித்து சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதற்காக இந்திய அரசின் சிறப்புத் திட்டத்தின் கீழ் மிகப்பெரிய சூப்பர் கம்ப்யூட்டர் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் 2015 ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட மழை அளவை காட்டிலும் எதிர்காலத்தில் பல மடங்கு மழை பெய்ய  வாய்ப்புள்ளது. சென்னைக்குப் பேரழிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது என்று கணித்துள்ளனர்.
ஆம், இந்த சூப்பர் கம்ப்யூட்டர் கொண்டு எதிர்காலத்தில் நடக்கும் பருவ மாற்றங்களைக் கணக்கிடும்போது 2035, 2055, 2075 என 20 ஆண்டுகளுக்கு இடைவெளியில் சென்னையில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மழை பொழிய வாய்ப்பு உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.
IITஇதுகுறித்து ஐஐடி பேராசிரியர் பாலாஜி கூறியதாவது :
2015 இல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைப் போல்  எதிர்காலத்திலும்  பருவ மாற்றத்தினால் ஏற்படும் மழை காரணமாகச் சென்னை பலமடங்கு ஆபத்தைச் சந்திக்க உள்ளது. இதற்கு முன்பு பெய்த மழைநீர் சென்னை மற்றும்  சென்னையைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து சென்னை மெரினா கடற் கரையை வந்தடைந்தது. ஆனால் எதிர்காலத்தில் பெய்யும் மழையின் அளவை ஒப்பிடும்போது அந்த மழை நீரானது வடியப் பல காலம் ஆகும். அதனால் சென்னை மெரினா கடற்கரையே சிறிது காலங்கள் மாயமாகும்  என்று கூறியுள்ளார்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here