Home முகப்பு உலக செய்திகள் கமலா ஹாரிஸ் ஒரு அமெரிக்கர் இல்லை?.. அமெரிக்காவில் புதிய சர்ச்சை!…

கமலா ஹாரிஸ் ஒரு அமெரிக்கர் இல்லை?.. அமெரிக்காவில் புதிய சர்ச்சை!…

420
0
Kamala Harris
Share

அமெரிக்க துணை அதிபர் தேர்தலுக்கு போட்டியிடும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸின் அமெரிக்க குடியுரிமை குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

அமெரிக்காவில் நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ ஃபிடன் போட்டியிடுகிறார். அதே கட்சியை சேர்ந்த தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகிறார். துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுபவர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.

ஆனால் கமலா ஹாரிஸின் தந்தை ஜமைக்காவை பூர்வீகமாக கொண்டவர், கமலாவின் தாய் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் கமலா ஹாரிஸின் அமெரிக்க குடியுரிமை குறித்த சர்ச்சை எழுந்துள்ளது.

H1B விசா குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை முக்கிய அறிவிப்பு!…

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அதிபர் ட்ரம்ப் “கமலா ஹாரிஸ் அமெரிக்கர் இல்லை என்றால் அவரால் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட முடியாது. ஜனநாயக கட்சியினர் ஒருவரை பதவியில் போட்டியிட அனுமதிக்கும் முன்னரே இவற்றை முறையாக சோதனை செய்திருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

இதற்கு முன்னாள் அதிபர் ஒபாமாவின் பூர்வீகம் கென்யாவை சேர்ந்தது என்பதால் இவ்வாறான சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here