Home செய்திகள் இந்தியா டெலிகிராம் செயலியில் வீடியோ கால் வசதி…

டெலிகிராம் செயலியில் வீடியோ கால் வசதி…

502
0
Share

சமூக வலைத்தளங்களில் பெரிதும் பிரபலமாக இருப்பது பேஸ்புக், வாட்ஸ்அப் இந்த வாட்ஸ்அப் செயலிக்குப் போட்டியாக விளங்கும் மற்றொரு செயலி தான் இந்த டெலிகிராம். டெலிகிராம் செயலியில் அவ்வப்போது புது புது அப்டேட்கள் அளித்து வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது வீடியோ காலிங் வசதியை விரைவில் தர இருப்பதாக டெலிகிராம் செயலி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெலிகிராம் செயலியில் வாய்ஸ் கால் வசதி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு இது நாள் வரை இந்த வசதியைத் தொடர்ந்து வருகிறது. ஆனால் மற்ற அனைத்து செயலிகளும் வீடியோ காலிங் வசதியைக் கொண்டு வந்து விட்டனர்.

தற்போது டெலிகிராம் பீட்டா வெர்ஷன் செயலியில் வீடியோ கால் வசதி சோதனையில் உள்ளது. விரைவில் டெலிகிராம் 7.0 வெர்ஷன் அப்டேடில் அனைத்து ஆண்ட்ராய்டு, IOS இயங்குதள சாதனங்களுக்கும் வீடியோ காலிங் வசதியை வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ காலிங் மற்ற செயலிகளில் உள்ள வீடியோ காலிங் போன்றே காட்சி அளிப்பதாக பீட்டா வெர்ஷன் பயனர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here