Home செய்திகள் இந்தியா இந்தியாவுடன் இணையும் இஸ்ரேல்,அமெரிக்கா ! 5G தொழில்நுட்பத்தில் புது முயற்சி..

இந்தியாவுடன் இணையும் இஸ்ரேல்,அமெரிக்கா ! 5G தொழில்நுட்பத்தில் புது முயற்சி..

389
0
Share

தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் அடுத்த மைல் கல்லாக விளங்கும் 5G தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் இந்தியாவுடன் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளும் கைகோர்த்துள்ளன.

தற்போது வளர்ச்சியடைந்து வரும் தொழில்நுட்ப உலகில் அடுத்த மைல்கல்லாக விளங்குவது 5G தொலைத்தொடர்பு. இதை உருவாக்குவதற்காக இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் ஒன்றிணைந்துள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜூலை 2017 இல் இஸ்ரேல் சென்ற நரேந்திர மோடி மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுப்பயணத்தின் போது இந்த 5G தொழில்நுட்ப திட்டத்தைத் தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டார். தற்போது இந்த 5G தொழில்நுட்பம் சர்வதேச பயன்பாட்டிற்காகவும், சர்வதேச வளர்ச்சிக்காகவும் அமெரிக்கத் தொழில்நுட்பதுறையின் (யு.எஸ்.ஏ.ஐ.டி) துணை நிர்வாகியான போன் கிளிக் தெரிவித்திருப்பதாவது.

ஹிந்தி தெரியாது போடா ! வைரலாகும் டி – சர்ட்..

இந்த 5G தொழில்நுட்பமானது அடுத்த தலைமுறைக்குத் தேவையான அறிவியல். ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி போன்றவற்றிற்குத் தேவையான பாதையில் முழு ஒத்துழைப்பு அளிக்கும். அது மட்டுமில்லாமல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொலைப்பேசியைப் பயன்படுத்துபவர்கள் இந்த தொழில்நுட்பம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவிற்கு இருக்கும்.

எனவே ஒன்று சேர்ந்து அதிகாரப்பூர்வமாக இந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்த மூன்று நாடுகளும் ஒன்றிணைந்து இந்த விருப்பத்தை நிறைவேற்றுவோம் என்று கிளிக் கூறுகிறார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here