Home செய்திகள் இந்தியா ஹிந்தி தெரியாது போடா ! வைரலாகும் டி – சர்ட்…

ஹிந்தி தெரியாது போடா ! வைரலாகும் டி – சர்ட்…

866
0
Share

சமீபத்தில் திரைப்பட பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை இந்தி தெரியாது போடா என்ற வாசகம் பொரித்த டி – சர்ட் அணிந்து ஹிந்தி திணிப்பது குறித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் திருப்பூரில் உள்ள தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

மத்திய அரசு இந்தி திணிப்பது குறித்து எதிர்க்கட்சிகள் பெரும் குற்றச்சாட்டு எழுப்பி வந்தனர். இதற்கு எதிராக தமிழ் பிரபலங்கள் இந்தி தெரியாது போடா தமிழ் பேசும் இந்தியன் என்ற டி – சர்ட் அணிந்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக இந்த டி-ஷர்ட் மீது ஆர்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

இதனை முதலில் வடிவமைத்த கார்த்திகேயன் இது குறித்து கூறியிருப்பதாவது :
நான் திருப்பூர் மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறேன். கடந்த 5 வருடங்களாக பின்னலாடை உற்பத்தி மற்றும் டி-ஷர்ட் போன்றவற்றை வடிவமைத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறேன்.

BSNL புதிய பிளான்… 49 ரூபாயில் 2ஜிபி டேட்டா !

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி இந்தி தெரியாது போடா என்ற வாக்கியத்தை பொரித்து டி – சர்ட் வேண்டும் என்று ஆர்டர் தந்தார். முதல் கட்டமாக அவருக்காக 1500 டி – சர்ட் தயாரித்துக் கொடுத்தேன். பின்பு திரைப்பிரபலங்கள் இதை அணிந்ததை அடுத்து இணையத்தில் ட்ரெண்டாகி தற்போது இந்த டி – சர்ட் 15 ஆயிரத்திற்கும் அதிகமான ஆர்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா கத்தார் போன்ற நாடுகளிலிருந்தும் ஆர்டர்கள் கிடைத்துள்ளது. இதனால் திருப்பூரில் உள்ள ஏராளமான பனியன் நிறுவனங்களுக்கு தற்போது வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here