Home செய்திகள் இந்தியா தனி விமானம் மூலம் அமெரிக்காவில் உள்ள தம் இந்திய ஊழியர்களைத் தாயகம் அனுப்பி வைத்தது இன்போசிஸ் !

தனி விமானம் மூலம் அமெரிக்காவில் உள்ள தம் இந்திய ஊழியர்களைத் தாயகம் அனுப்பி வைத்தது இன்போசிஸ் !

325
0
Infosys
Share

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடுகிறது. அதிலும் அமெரிக்காவைப் பொருத்தவரை இந்த வைரஸ் ஆனது அதிவேகமாகப் பரவி வருகிறது. இது வரை 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் 1.30 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தகைய சூழலில் அமெரிக்காவிலுள்ள தம் ஊழியர்களை இன்போசிஸ் நிறுவனம் பாதுகாப்பாகத் தாயகம் திரும்பி வைக்க ஏற்பாடுகள் செய்து வந்தன. அவர்கள் அங்கிருந்து இந்தியா வர முடியாமல்  சிக்கித் திரும்ப முடியாமல் 206 பணியாளர்கள் தவித்தனர்.
இதற்கு இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம் 206 ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரைப் பாதுகாப்பாக ஒரு தனி விமானம் ஏற்பாடு செய்து பெங்களூரு விமான நிலையத்திற்குப் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்தது.
அதுமட்டுமின்றி மத்திய அரசு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள கொரோனா பரிசோதனை மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்துதல் போன்றவற்றைச் சிறப்பாகச் செய்து. அவரவர் இல்லங்களில் பாதுகாப்பாகக் கொண்டுவந்து சேர்த்துள்ளது. இதனால் 206 பணியாளர்களும் பத்திரமாகத் தாயகம் திரும்பினர்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here