Home செய்திகள் இந்தியா அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தேர்வு ரத்து இல்லை உள்துறை அமைச்சகம் முடிவு..

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தேர்வு ரத்து இல்லை உள்துறை அமைச்சகம் முடிவு..

445
0
Central Government
Share

இந்தியாவில் கொரோனா பரவல்  காரணமாக ஊரடங்கு மார்ச் 22 முதல் அமல்படுத்தப்பட்டது. அதை அடுத்து அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. அதே போல் அந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருந்த பருவ தேர்வுகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதே போல் தமிழ்நாட்டிலும் பத்தாம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்பட்டன.
கடந்த வாரத்தில் யுஜிசி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு ரத்து செய்யுமாறு பரிந்துரை செய்தது. இதற்கு மத்திய அரசு தற்போது விடை அளித்துள்ளது. ஊரடங்கு கடந்த 1 முதல் பல கட்டங்களாகத் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த தளர்வுகளின் செமஸ்டர் தேர்வுகளையும் நடத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையானது: பல்கலைக் கழக தேர்வுகள் மற்றும் இறுதி ஆண்டு தேர்வுகள் அனைத்தும் நடத்திக் கொள்ளுமாறு அனைத்து பல்கலைக் கழகங்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளது.
எனவே மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இந்த இறுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் தேர்வுக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கின்றது. வழக்கமான பள்ளி, கல்லூரி செயல்பாட்டிற்கு எந்தவித அனுமதியும் அழைக்கப்படவில்லை.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here