Home செய்திகள் இந்தியா இந்தியாவும் ஜப்பானும் 5ஜி தொழில் நுட்பத்தில் இணைய உள்ளது…

இந்தியாவும் ஜப்பானும் 5ஜி தொழில் நுட்பத்தில் இணைய உள்ளது…

390
0
Share

தொலைத்தொடர்புத் துறையில் அடுத்த மைல் கல்லாக இருக்கும் 5ஜி மற்றும் 5ஜி பிளஸ் ஆகிய தொழில்நுட்பத்திற்கான இந்தியா ஜப்பானுடன் கைகோர்க்க முடிவு செய்துள்ளது.

இந்திய பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பானின் புதிய பிரதமர்யோஷிஹிடே சுகா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். குவாட் எனப்படும் நாற்கர பாதுகாப்பு உரையாடல்கள் உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இஸ்ரேலுடன் இணைந்து தொழில் நுட்பங்களை வளர்க்க வேண்டும் என்றும் இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

சாம்சங் அறிமுகப்படுத்தும் 5 கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்..

அது மட்டுமில்லாமல் அடுத்த தலைமுறை வளர்ச்சிக்காக தொலைதொடர்பு துறையின் வளர்ச்சிக்காகவும் வெளியுறவு அமைச்சர்கள் இடையே அடுத்த மாதம் ஜப்பானில் சிறப்புக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இந்த கூட்டத்தில் இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளும் உலகளாவிய கூட்டாட்சியை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல தேவையான முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here