Home செய்திகள் இந்தியா சாம்சங் அறிமுகப்படுத்தும் 5 கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்..

சாம்சங் அறிமுகப்படுத்தும் 5 கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்..

351
0
Samsung Galaxy A71 5G
Share

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஸ்மாட்போன் பயன்படுத்தி வருகிறோம். அதில் பெரும்பாலும் கேமராக்களை வைத்து இதனுடைய விலையை முக்கியமாக நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்க தற்போது மூன்று கேமரா 4 கேமரா என கேமராவைக் கொண்டு ஸ்மார்ட்போன்களின் வரவு அதிகரித்துள்ளது.

தற்போது சாம்சங் நிறுவனம் 5 கேமராக்கள் கொண்டு ஒரு ஸ்மார்ட் போனை வெளியிட இருப்பதாக தகவல் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ72 எனும் பெயரில் உருவாகி வருகிறது. இதில் 5 கேமரா சென்சார் கொண்ட முதல் சாம்சங் போன் என்றும் தெரிவிக்கின்றனர். இந்த கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு அரையாண்டு காலகட்டத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறுகின்றனர்.

இந்த ஸ்மார்ட் போன்களின் விலையை மிட் – ரேஞ்ச் என்றழைக்கப்படும் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி ஏ7 மாடலின் அப்டேட் வெர்சனாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

தற்போது கிடைத்த தகவல்களின் படி கேலக்ஸி ஏ72 மாடலில் 64 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 8 எம்பி டெலிபோட்டோ கேமரா, 5 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 5 எம்பி டெப்த் சென்சார் போன்றவை வழங்கப்படுகிறது. இத்துடன் 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

இது தவிர அடுத்த ஆண்டு முதல் ஸ்மார்ட்போன்களின் கேமரா மாட்யூல்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த சாம்சங் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் வசதி கொண்ட முதல் மாடலாக கேலக்ஸி ஏ72 இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

திவாட்டியாவிற்கு நன்றி தெரிவித்த யுவராஜ் சிங் !

இத்துடன் உயர்-ரக கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களில் OIS தொழில்நுட்பம் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. கேலக்ஸி ஏ72 மாடலுடன் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here