Home செய்திகள் இந்தியா காஞ்சிபுரத்தில் அடையாள அட்டை திட்டம் ! மக்கள் வெளியில் வருவதைக் கட்டுப்படுத்த புதிய யுக்தி…

காஞ்சிபுரத்தில் அடையாள அட்டை திட்டம் ! மக்கள் வெளியில் வருவதைக் கட்டுப்படுத்த புதிய யுக்தி…

424
0
kanchipuram
Share

கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்ததைத் தொடர்ந்து பரவலைக் கட்டுப்படுத்த நாடெங்கும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது மக்களை  அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து வெளியில் வராமல் கட்டுப்படுத்துவதற்காக ஒவ்வொரு மாவட்டங்களும் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டுவருகின்றனர்.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வீடுவீடாக சென்று அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. இந்த அடையாள  அட்டை சில நிறங்களைக் கொண்டிருக்கும் எனவும், ஒரு குடும்பத்திற்கு ஒரு அட்டை மட்டுமே வழங்கப்படும் என்றும்,  இந்த நிறத்தைக் கொண்டு ஒரு நபர் மட்டும் அந்த தினங்களில் வெளியில் வந்து தேவையான பொருட்களை வாங்கி கொண்டு 12 மணிக்குள் அவரவர் இல்லங்களுக்குச் சென்று விட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.

சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள், பச்சை, என பல  வண்ணங்களில் இந்த அட்டைகள் வழங்கப்பட உள்ளன. இந்த நிறங்கள் குறிப்பிட்ட தினங்களைக் குறிக்கிறது.

இந்த அடையாள அட்டையை அங்கன்வாடி பணியாளர்களுடன் சில தன்னார்வலர்கள்  மூலம் வீடு வீடாகச் சென்று சில தினங்களில் வழங்கப்பட உள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here