Home ஆன்மீகம் பெண்களுக்கு வைக்கக் கூடாத பெயர்கள் ! மீறி வைத்தால் கஷ்டம் தேடி வரும் என்று சாஸ்திரம் சொல்கிறது…

பெண்களுக்கு வைக்கக் கூடாத பெயர்கள் ! மீறி வைத்தால் கஷ்டம் தேடி வரும் என்று சாஸ்திரம் சொல்கிறது…

983
0
baby photos
Share

நம் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் போது ஜாதகம் பார்த்து, எந்த எழுத்தில் தொடங்கும் பெயரை  வைக்கலாம் என்று முடிவெடுப்போம். ஆனால் பெயரை வைப்பதற்கு முன்பு இந்தப் பெயரை வைக்கலாமா ? வேண்டாமா ? என  யாரும் யோசிப்பதில்லை. ஏனென்றால் அந்த பெயரினால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என நமக்குத் தெரியாது. எல்லா பெயர்களுமே நல்ல பெயர்கள் தான் என்ற கூற்று இருந்தாலும், சில சமயம் இயற்கையான விஷயங்களையும், அதன் குணாதிசயங்களையும் நம்மால் கட்டாயம் மாற்ற இயலாது. அதன் அடிப்படையில் என்னென்ன பெயர்கள் பெண் குழந்தைகளுக்கு வைக்க கூடாது என்பதை இந்த பதிவின் மூலம் தெளிவாகக் காணலாம்.river

மனித சாஸ்திர கூற்றின்படி சில பெயர்களைப் பெண்களுக்கு வைக்கக் கூடாது என ரிஷிகளால் கூறப்பட்டுள்ளது. மேலும்  இந்தப் பெயர்களை பெண்களுக்கு வைக்கக்கூடாது எனத் தெரிந்தே யாரும் வைப்பதில்லை. நாம் அறியாத பட்சத்தில் செய்த தவறுகளே இது. வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களும், எத்தனையோ இழப்புகளையும் சந்தித்து வாழ்ந்து காட்டியவர்களின் பெயர்களைப் பெண் குழந்தைகளுக்கு வைக்கும் போது, அதே மாதிரி கஷ்டங்களை இக்குழந்தைகளும் அனுபவிப்பார்கள் என்று சாஸ்திரம் சொல்கிறது . எடுத்துக்காட்டாக அருந்ததி, அகல்யா, திரௌபதி, சீதா, இப்படிப்பட்ட பெயர்களை முடிந்தவரை வைக்காமல் தவிர்ப்பது நல்லது.

அதேபோன்று சில மலைகளின் பெயர்களும் வைக்கக் கூடாது என சாஸ்திரம் கூறுகிறது. எடுத்துக்காட்டாக விந்திய மலையை விந்தியா என வைப்பார்கள். முடிந்தவரை மலைகளின்  பெயர்களைப் பெண்களுக்குப் பெயராக வைப்பதை தவிர்த்து கொள்ள வேண்டும்.

பிறந்த தேதி பலன்கள்..

அடுத்தது ஓடும் நதிகளின் பெயர்களையும் தவிர்க்க வேண்டும் எனச் சாஸ்திரம் கூறுகிறது. உதாரணமாகக் கங்கா, யமுனா,  சரஸ்வதி, கோதாவரி, காவேரி, சிந்து இப்படிப்பட்ட பெயர்களை  முடிந்தவரை தவிர்த்துக் கொள்ள வேண்டும். நதிகளின் பெயரினை பெண்களுக்கு வைத்தால் திருமணம் ஆகாமல் கன்னியராகவே இருக்க நேரிடும்  என்ற நம்பிக்கையும் இதில் அடங்கியுள்ளது.

சில பூக்களின் பெயர்களையும் வைக்கக்கூடாது எனச்  சொல்லப்பட்டுள்ளது. பூக்களின் வாழ்நாள் ஆனது, நறுமணம் வீசி ஓரிரு நாட்களில் முடிந்து விடும். ஆகையால் முடிந்தவரை பூக்களின் பெயர்கள் வைப்பதைத் தவிர்த்துக் கொள்ளலாம். இயற்கைக்கு, இயற்கையாகவே பெற்ற பெயர்களில் உள்ள சக்தியும் அதன் தாக்கமும், அந்தப் பெயரை வைத்திருப்பவர்களைத் தாக்கலாம் என்ற காரணத்தினால் தான் இந்த பெயர்களை வைக்கக் கூடாது என்று கூறியுள்ளனர். நமக்குத் தெரிந்தவர்கள், நண்பர், உறவினர்  இவர்களுள் இப்பெயரை வைத்திருப்பவர்கள் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு வருவதை நாம் கண்கூட கண்டிருப்போம்.

இப்போது பிரச்சனை இருக்கிறது என்று தெரிந்த பின்பு  எதற்காக அந்த பெயரை வைக்கவேண்டும். சிலருக்குப் பிறக்கும் போது ஒரு பெயரை வைத்திருப்பார்கள். அவர்கள் வளர்ந்த பின் தாமாகவே பெயரை மாற்றி வைத்து கொண்டிருப்பார்கள். பெயரை மாற்றிய பிறகு அவருக்கு யோகம் அடித்திருக்கலாம். அப்படிப்பட்ட பலரை நாம் சந்தித்திருப்போம் அல்லவா? இதற்குப் பல பிரபலங்களே எடுத்துக்காட்டு. எது எப்படியோ, சில பெயர்களை வைத்தால் கஷ்டம் வரும் எனத் தெரிந்தும் அதை வைக்கலாமா ? தவிர்த்துவிட்டு, அர்த்தமுள்ள எத்தனையோ பெயர்கள் உள்ளன. அதில் தங்களுக்கு பிடித்த ஒன்றை வைக்கலாமே !


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here