Home ஆன்மீகம் இந்து மதத் தலைவர் உடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது குறித்து தமிழக அரசு ஆலோசனை…

இந்து மதத் தலைவர் உடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது குறித்து தமிழக அரசு ஆலோசனை…

391
0
tamilnadu
Share

ஒவ்வொரு ஆண்டும் இந்து மதத்தில் முக்கிய பண்டிகையாகக் கொண்டாடப்படுவது விநாயகசதுர்த்தி. அதே போல் இந்த ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஆனால் இத்தனை ஆண்டுகளைப் போல் இல்லாமல் இந்த ஆண்டு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.

இந்த ஊரடங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் விநாயகர் சதுர்த்தி எப்படி கொண்டாட முடியும் என்று குழப்பத்தில் உள்ளனர். ஆகஸ்டு 31 வரை எந்த ஒரு பெரிய கோவில்களும் திறப்பதில்லை, பொதுமக்களும் தரிசிக்க அனுமதி கிடையாது. இப்படியிருக்க எப்படி பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் எல்லாம் வைத்து பூஜை செய்ய முடியும், ஊர்வலம் கொண்டு செல்ல முடியும், சிலையை கரைக்க முடியும் என பல்வேறு குழப்பத்தில் உள்ளனர்.

தற்போது இதற்காக இந்து மத முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளனர். இதற்காக இன்று பிற்பகல் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் இந்து மதத் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here