Home லைஃப் ஸ்டைல் ஆரோக்கியம் வெற்றிலை, துளசி சூப்… சளி, இரும்பல் எளிதில் குணமாகும்!

வெற்றிலை, துளசி சூப்… சளி, இரும்பல் எளிதில் குணமாகும்!

717
0
Share

பருவ மழைக்காலம் மற்றும் கால மாற்றத்தில் பெரும்பாலானோருக்கு சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அது மட்டுமில்லாமல் தற்போது கொரோனா வைரசின் பெரிய அறிகுறியாக கருதுவது இந்த சளி, இரும்பல் தான். இவ்வாறு இந்த சளி இரும்பலை எளிதில் குணமடையச் செய்யும் சில எளிய வீட்டு முறைகள் உள்ளன.

அதிலும் இந்த சித்த வைத்திய முறையில் நம் வீட்டில் உள்ள சாதாரண பொருட்களைக் கொண்டு சில மருத்துவ கஷாயங்களையும், சூப்களையும் செய்து பருகினால் சளி இரும்பல் குணமடைந்து விடும். அந்த வகையில் தற்போது வெற்றிலை, துளசி ஆகியவற்றை கொண்டு சூப் செய்து எவ்வாறு சளி மற்றும் இருமலை குணப்படுத்த முடியும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்..

தேவையான பொருட்கள் :
தண்ணீர் 1கப்.
சீரகப் பொடி – 1/2 தேக்கரண்டி
மிளகு பொடி – 1/2 தேக்கரண்டி
மஞ்சள்ப் பொடி – 1 தேக்கரண்டி
துளசி இலை – ஒரு கைப்பிடி அளவு
வெற்றிலை – 6 இலைகள்
புளி கரைசல் – தேக்கரண்டி
இஞ்சி – ஒரு துண்டு
தக்காளி – ஒன்று
சிவப்பு மிளகாய் – ஒன்று
உப்பு – தேவையான அளவு

செய்முறை :
இந்த கஷாயத்தின் முக்கியமான பொருளாக கருதப்படுவது வெற்றிலை, துளசி தான். இந்த வெற்றிலையும், துளசியையும் நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்பு தக்காளி, இஞ்சியையும் உடன் சிறிதளவு பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் சிறிதளவு மஞ்சள் தூள், நறுக்கி வைத்துள்ள துளசி இலை, வெற்றிலை, தக்காளி, புளிக் கரைசல், சிவப்பு மிளகாய், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்பு நன்கு கொதித்த பிறகு வாசம் வரும் போது அதனை வடிகட்டி மிளகுத்தூள் சேர்த்து பருக வேண்டும்.

இப்படி பருகும் போது தொண்டைச்சளி, மார்சளி என அனைத்தும் நீங்கி உடல் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here