Home செய்திகள் இந்தியா கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய வேலைவாய்ப்பு செயலி !

கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய வேலைவாய்ப்பு செயலி !

544
0
Share

இன்றைய காலகட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது என்பது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. படித்து முடித்த பிறகு வேலைவாய்ப்பு எந்த நிறுவனத்தில் கிடைக்கும், எந்த நிறுவனத்திற்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள் என்ற தகவல் பெறுவதற்கு பெரும் சிரமம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இது போன்ற தகவல்களை வழங்குவதற்காக Linked in,naukri, Timesjobs என பல்வேறு தளங்கள் இது நாள் வரை செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த தளங்களுக்குப் போட்டியாகவும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு அளிப்பதற்காகவும் கூகுள் நிறுவனம் புதிதாக ஒரு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் பெயர் Kormo jobs என்று வைத்துள்ளது.

இந்த செயலி முதன் முதலில் 2018 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு 2019ல் இந்தோனேசியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்தியாவில் இந்த செயலியை அறிமுகப்படுத்த உள்ளது.

தேசிய பணியாளர் தேர்வு முகமை இளைஞர்களின் நம்பிக்கை : மோடி ட்வீட்...

 

இதில் யார் வேண்டுமானாலும் தங்களுக்கு என்று ஒரு போர்டல் தயார் செய்து கொள்ளலாம். அதில் அவர்களுடைய சுயவிவரங்கள் முழுவதையும் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். அதாவது கல்வித் தகுதி,பெயர், வயது போன்ற தகவல்கள். அதன் பிறகு தங்களுக்குப் பிடித்த வேலையும் தங்களுக்குப் பிடித்த இடத்தில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களையும் கூகுள் நிறுவனம் இந்த kormo jobs செயலியின் மூலம் தங்களுக்குப் பரிந்துரை செய்யும். இது மட்டுமல்லாமல் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் ஏதாவது உள்ளதா என்றும் தனியாகத் தேடிக்கொள்ளலாம் என்றும் சொல்லப்படுகிறது. கூகுள் இணையதளத்தில் ஏற்கனவே என்று தனிப் பிரிவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here