Home செய்திகள் இந்தியா பார்வையற்றோர் பயன்படுத்தும்  `ப்ரெய்லி கீபோர்டு’ – கூகுள் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பார்வையற்றோர் பயன்படுத்தும்  `ப்ரெய்லி கீபோர்டு’ – கூகுள் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

795
0
Share

பார்வையற்றோர் உபயோகிக்கும் ப்ரெய்லி கீபோர்டில் உள்ள ஆறு விசைகள் ப்ரெய்லியின் ஆறு புள்ளிகளை வைத்து  உருவாக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி பார்வையற்றோர்களும் நேரடியாக மொபைலில் தட்டச்சு செய்யலாம்.google talkback

பார்வையற்றோர் பயன்படுத்தும் பிரெய்லி (Braille) முறையை மொபைல்களுக்குள் தற்போது கொண்டு  வந்துள்ளது கூகுள்  நிறுவனம். பார்வையற்றோர் மொபைலில் தட்டச்சு செய்வதற்கு இதற்கு முன் தனிப்பட்ட எந்தவொரு வசதியும் இல்லை. ப்ரெய்லி கீபோர்டு சார்ந்த ஒரு சில நிறுவனங்களின் செயலிகள் பல கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ளன. இதுவரை நம்பகமான நிறுவனத்திலிருந்து எந்த செயலிகளும் உபயோகிக்கும் வகையில்  இல்லை. தற்போது அந்தக் குறையைப் போக்கியுள்ளது கூகுள் நிறுவனம்.

ப்ரெய்லி முறையில் அடிப்படையாக இருப்பது ஆறு புள்ளிகள்தான். இந்த ஆறு புள்ளிகளை விதவிதமான சேர்க்கையில்  சேர்த்து எழுத்துகளையும் எண்களையும் நாம் அறிந்துகொள்ள முடியும். இதே போன்று ப்ரெய்லி கீபோர்ட் ஆனது ஆறு விசைகள் ப்ரெய்லியின் ஆறு புள்ளிகளை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பார்வையற்றோர்களும் நேரடியாக மொபைலில் தட்டச்சு செய்ய  முடியும் எனக் கூகுள் நிறுவனம் அதன் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

இந்த வசதியைப் பயன்படுத்தி கூகுளின் Talkback சேவை  எப்போதும் பயன்படுத்தும் வகையில் On-லேயே இருக்க வேண்டும். இந்த Talkback வசதி முற்றிலும் பார்வையற்றோருக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது என்பதால் திரையில் தோன்றும் அனைத்தையும் அச்சேவைக் கண்காணித்துக் கொண்டிருக்கும். ஏனென்றால் திரையில் தோன்றும் அனைத்தையும் பயன்படுத்துவோருக்கு வாசித்துக்காட்ட வேண்டிய தேவை இருக்கும். இந்த பரெய்லி கீபோர்டு வசதி  ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் அதற்கு மேலுள்ள இயங்குதளங்களில் இவை பயன்பாட்டிற்கு வரும் எனத்  கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வசதி கூகுளின் Talkback சேவையை ON செய்தால்  போதும், பின்பு அதன் வழிகாட்டுதலின்படி சென்று ஆக்டிவேட் செய்யலாம் என நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here