Home செய்திகள் இந்தியா சீசா விளையாடும் தங்கம் விலை!!

சீசா விளையாடும் தங்கம் விலை!!

341
0
Share

தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் இறக்கமாகவே உள்ளது. தற்போது சில்லறை விலையில் 39 ஆயிரத்திற்கு ஒரு சவரன் விற்பனையாகிறது.

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்தது. எனவே வர்த்தகர்கள் முதலீட்டைத் தங்கத்தின் மீது செய்தனர். இதனால் தங்கம் விலை 43 ஆயிரம் வரை ஒரு சவரனுக்கு உயர்ந்தது.

சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தும் வயர்லெஸ் சார்ஜர் ! மூன்று சாதனங்களை சார்ஜ் செய்ய முடியுமாம்…

அதன் பிறகுச் சற்று பொருளாதாரம் உயர்வைச் சந்தித்ததால் தங்கத்தின் மீது முதலீடு செய்வது குறைந்தது. இதனால் கடந்த வாரம் முழுவதும் தங்கம் விலை ஏற்றம், இறக்கமாகவே காணப்பட்டது. அதிலும் கடந்த இரண்டு நாட்களாக கடும் சரிவைச் சந்தித்து தங்கம் விலை ஒரு சவரனுக்கு 39 ஆயிரத்திற்கும் விற்பனையாகி வந்தது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் சற்று மூச்சு விடுகின்றனர்.

தற்போது தங்கம் விலை உயர்ந்து சென்னையில் சில்லறை விலையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.39,088க்கு விற்பனை ஆகிறது. அதே போலக் கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ரூ.4,886க்கு விற்பனை ஆகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here