Home செய்திகள் இந்தியா கொரோனாவால் பெட்ரோல், டீசல் விலை வீழ்ச்சி : மக்கள் மகிழ்ச்சி; மேலும் குறைய வாய்ப்பு…

கொரோனாவால் பெட்ரோல், டீசல் விலை வீழ்ச்சி : மக்கள் மகிழ்ச்சி; மேலும் குறைய வாய்ப்பு…

421
0
Chennai Petrol price
Share

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவின் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Petrol,Diesel Chennai

கொரோனா (கோவிட் – 19) தாக்கத்தால், சீனா போன்ற பெரிய நாடுகளின் இயல்பு வாழ்க்கை பாதித்ததால் கச்சா எண்ணெய் தேக்கமாகிவிட்டது. இதனால் கடந்த இரு மாதங்களாகக் கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்தது.

தற்போது பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் சவுதி அரேபியாவும் மற்றும் ரஷ்யாவின் தேக்கம் அதிகரிக்க, தங்களிடம் உள்ள கச்சா எண்ணெய்யை விற்க முடிவு செய்ததால்  நேற்றைய வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை பெரும் வீழ்ச்சி அடைந்தது.

கொரோனா வைரஸ் எதிரொலியாக இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் விலையைக் குறைத்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை பெட்ரோலுக்கு நேற்றைய விலையிலிருந்து 31 காசுகள் 73.02 ரூபாயும், டீசல் விலையில் 27 காசுகள் குறைத்து 66.48 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால் வாகன ஓட்டிகளிடையே சற்று மகிழ்ச்சி நிலவினாலும்,பெருமளவு கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும் மிகக் கணிசமான அளவே பெட்ரோல், டீசல் விலை குறைத்திருப்பது ஒரு கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் எண்ணெய் நிறுவனங்களிடம் பேசி விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைவைத்துள்ளனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here