Home அரசாங்க வேலை TNPSC TNPSC Group 2 and 2A 2020 : 3000+ காலி பணியிடங்கள் அறிவிப்பு..

TNPSC Group 2 and 2A 2020 : 3000+ காலி பணியிடங்கள் அறிவிப்பு..

807
0
TNPSC-Group-2-exam
Share

3000ற்கும் அதிகமாக காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கு குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு நடத்த TNPSC தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி மே மாதம் தேர்வு அறிவிப்புகள் வெளிவரும் என்று தேர்வாணைய செயலாளர் கூறியுள்ளார். ஆகையால் வரும் மே மாதம் தேர்வு குறித்த அனைத்து தகவல்களும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது..
TNPSC 2020

தமிழக அரசு ஆண்டு தோறும் போட்டி தேர்வு மூலம் பல காலி பணியிடங்களை நிரப்பிவருகின்றது. அதற்கான அறிவிப்பை முன்கூட்டியே வெளியிடுகிறது. இளைஞர்கள் அதற்குத் தயாராகுகின்றனர். அவ்வாறு தற்போது இந்த தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியாக உள்ள பணியிடங்கள் எண்ணிக்கை : 3000+

குரூப் 2 :
நகராட்சி ஆணையர், சார்பதிவாளர், துணை வணிகவரி அலுவலகர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், கூட்டுறவுச் சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் போன்ற பணியிடங்களும்

குரூப் 2ஏ:
பல்வேறு துறைகளின் நேர்முக உதவியாளர், உதவியாளர் போன்ற பணியிடங்கள் நிரப்பப் படவுள்ளன.

தேர்வு கட்டண விவரங்கள்:

பதிவு கட்டணம்
ரூ.150/- முதல் முறை பதிவு செய்பவர்கள் இந்த கட்டணம் செலுத்திப் பதிவு செய்ய வேண்டும் அதன் பிறகு தேர்வு கட்டணம் செலுத்தி வேண்டும். ஏற்கனவே செலுத்தி இருந்தால் இது தேவை இல்லை.

தேர்வு கட்டணம் – ரூ.150/- ஆகும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள், குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 33 வயதுக்குள் இருக்கலாம். பிரிவு அடிப்படையில் வயது தளர்வு இருக்கும்.

கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு நடத்தப்படும் முறை :
3 தேர்வுகள் நடத்தப்படும்
அதில் 1 தேர்வு ப்ரீலிம்ஸ் ஆகும். இதில் வெற்றி பெற்றால் அடுத்த தேர்விற்குத் தகுதி ஆவார்கள்.
2வது தேர்வு மெய்ன்ஸ் ஆகும் இதைத் தேர்ச்சி பெற்றால் நேர்காணல் தேர்வுக்குத் தகுதி ஆவார்கள்.
கடைசியாக நேர்காணல் ஆகும்.

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.tnpscexams.in என்ற இணையத்தில் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான அணைத்து தகவல்களும் இந்த தளத்தில் வெளியாகும்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here