Home செய்திகள் இந்தியா வங்கியில் பணம் செலுத்த கட்டணம்… பொதுமக்கள் அதிர்ச்சி!

வங்கியில் பணம் செலுத்த கட்டணம்… பொதுமக்கள் அதிர்ச்சி!

519
0
bank
Share

வங்கியில் தற்போது ஏடிஎம் மெஷின் வாயிலாக பணம் செலுத்தும் முறையை கடைபிடித்து வருகின்றனர். விடுமுறை மற்றும் வேலை நேரம் இல்லாத சமயங்களில் ஏடிஎம் மெஷின் வாயிலாக பணம் செலுத்தினால் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படும் என்று தனியார் வங்கிகள் அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தை ஏற்கனவே ஆக்சிஸ் பேங்க் ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைபடுத்தி வருகிறது. குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் செலுத்துவோருக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று வங்கி தரப்பில் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து தற்போது ஐசிஐசிஐ வங்கியும் அடுத்த மாதம் முதல் இந்த கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் ஒரு முறையோ அல்லது பல முறையோ பத்தாயிரத்திற்கு மேல் மிஷின் மூலம் டெபாசிட் செய்தால் அடிப்படை கட்டணமாக ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்த கட்டணம் சேமிப்பு கணக்கு, ஜன்தன் கணக்கு, மூத்த குடிமக்கள் போன்றோர்க்கு கிடையாது என்றும் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் மீண்டும் முதலிடம் பிடித்த சாம்சங் ! எப்படி தெரியுமா ?

இந்த முடிவால் வணிகர்களும்,சில்லரை கடைக்காரர்களும் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். ஏனென்றால் இவர்கள் அன்றைய வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பும் போது வங்கியில் பணம் செலுத்துவர். தற்போது இந்த கூடுதல் கட்டண வசூலிப்பு காரணமாக வியாபாரம் செய்யும் பணத்தை கடையில் அல்லது வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உருவாகும் என்று தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வங்கி தரப்பில் கூறியிருப்பதாவது :
ஏடிஎம் மிஷின் வாயிலாகா பணம் செலுத்துவோருக்காக அதனை கலெக்ட் செய்வதற்கு கூடுதல் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள், மேலும் குறைந்த ரொக்கம், அதிக டிஜிட்டல் என்ற அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவு காரணமாக இந்த கட்டண வசூலிப்பு அமல்படுத்தும் சூழ்நிலை உருவாகி உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here