Home முகப்பு உலக செய்திகள் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் 500 விக்கெட் வீழ்த்தி சாதனை..

இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் 500 விக்கெட் வீழ்த்தி சாதனை..

318
0
Share

இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டெஸ்ட் இறுதிப் போட்டி மான்செஸ்டரில் தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி தற்போது வெற்றி பெறும் தறுவாயில் உள்ளது.

ஆனால் இதில் என்ன ஆச்சரியம் என்றால் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 பந்த வீச்சாளர்கள் 500 விக்கெட் வீழ்த்தியுள்ளனர் தற்போது இந்த வரிசையில் இவர் 7வதாக இணைந்துள்ளார். இதில் என்ன ஆச்சரியம் என்றால் வெஸ்ட் இண்டீஸ் உடன் இவர் 500வது விக்கெட்டை பெற்றுள்ளது பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

இந்த இறுதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி சற்று முன் வரை 7 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது. இந்த அணி இன்னும் 292 ரன்கள் அந்த அணி எடுக்க வேண்டும் என்பதால் இங்கிலாந்திற்கே வெற்றி கிடைக்கும் என்று கிட்டத்தட்ட உறுதி ஆகி விட்டதாகக் கூறப்படுகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here