Home முகப்பு உலக செய்திகள் கிருமியை போக்க மின்சார வைத்தியம்?.. விஞ்ஞானிகள் ஆய்வு!…

கிருமியை போக்க மின்சார வைத்தியம்?.. விஞ்ஞானிகள் ஆய்வு!…

342
0
covid 19
Share

நோய்களை உண்டாக்கும் ‘சார்ஸ்-கோவ் – 2’ என்ற கொரோனா வைரசின் பலகீனம் எது என்று ஒரு தரப்பு விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றன. அந்த வகையில், ‘ஏ.சி.எஸ். நேனோ’ இதழில் வெளியாகியுள்ள ஒரு ஆய்வு, அந்த வைரசின் பலகீனத்தை, அதன் பலத்திற்கு அருகிலேயே இருப்பதை கண்டறிந்துள்ளது.

கொரோனா வைரசின் கொடிய நீட்சிக் கரங்கள் தான், மனித செல்களை பற்றிக்கொண்டு, பல்கிப் பெருகுகின்றன. இந்த நீட்சிகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் தான் அந்த பலகீனம் உள்ளதாக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். நீட்சியிலிருந்து, 10 நேனோ மீட்டர் தொலைவிலேயே உள்ள அந்தப் பகுதிக்கு நேர்மறை மின் தன்மை உள்ளது.

ரேஷன் கடையா ! நோய் பரவல் மையமா ! பொதுமக்கள் அலட்சியம்…

இதற்கு எதிர்மறை மின் தன்மை கொண்ட மனித செல்களின் மேற்பரப்பில் காந்தம் போல ஒட்டிக்கொள்கிறது.ஆய்வுகூடத்தில், இவை ஒட்டுவதற்கு முன்பாக குறுக்கிட்டு, எதிர்மறை மின் முனைக் கொண்ட மூலக்கூறுகளை செருகியபோது அந்த வைரசால் மனித செல்லை தொற்றிக்கொள்ள முடியாமல் போனது. தற்போது, இந்த கண்டுபிடிப்பை, ஒரு நம்பகமான சிகிச்சை முறையாக எப்படி மாற்றுவது என்ற ஆய்வை விஞ்ஞானிகள் தொடர்கின்றனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here