Home செய்திகள் இந்தியா பிக் பாஸ் 4 போட்டியாளர்கள் விவரம் உள்ளே…

பிக் பாஸ் 4 போட்டியாளர்கள் விவரம் உள்ளே…

603
0
Big boss 4
Share

கொரோனா வைரஸ் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். எனவே பொழுது போக்கின் காரணமாக கேம்கள், தொலைக்காட்சிகளும் தான் இவர்களுக்கு உறுதுணையாக உள்ளது. இதை அடுத்து டிவிக்களில் மிக மிக முக்கிய நிகழ்ச்சியாகக் கருதப்படுவது பிக் பாஸ் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கும் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பிக் பாஸ் சீசன் 4 ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தற்போது நாடகங்கள் படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் தொடங்குவதற்கான பணிகள் தொடங்கி விட்டனர். எனவே தமிழிலும் இதற்கான பணியை தொடங்க தற்போது விஜய் டிவி மும்முரமாக உள்ளது. அதற்கான முதற்கட்ட வேலையாகப் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் பிக்பாஸ் குழு களமிறங்கியுள்ளனர்.

இதற்காக பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்களாக அதுல்யா ரவி, கிரன் ரதொட், கனா காணும் காலங்கள் இர்ப்பான், குக் வித் கோமாளி புகழ், ரம்யா பாண்டியன், வித்யூலேகா ராமன். தற்போதைக்கு முதற்கட்ட தேர்வு முடிந்துள்ளது. அடுத்த கட்டமாக மீண்டும் போட்டியாளர்களைத் தேர்வு செய்ய இருப்பதாக விஜய் தொலைக்காட்சி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ரம்யா பாண்டியன் இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த நடிகையாக இருக்கிறார். எனவே பிக் பாஸ் சீசன் தொடங்கியதும். ரம்யா பாண்டியன் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here