Home செய்திகள் இந்தியா சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆகி வரும் டல்கோனா காபி…  செய்முறை தெரியுமா ?

சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆகி வரும் டல்கோனா காபி…  செய்முறை தெரியுமா ?

780
0
dalgona challenge
Share

ஊரடங்கின் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அப்போது தென் கொரியாவின் ஒரு பகுதியில் இருந்து பெண்மணி ஒரு புதிய காபியைத் தயார் செய்து டிக்டாக் இல் பதிவிட்டுள்ளார். இதற்கு சேலஞ்சும் விடுத்துள்ளார்.

இணையதளத்தில் தற்போது பலரும் தங்களது வீடுகளில் செய்து பார்த்து அதைப் புகைப்படம் எடுத்து பகிர்ந்து பல்வேறு social media தளங்களில் (tiktok, facebook, instagram, youtube, etc…) பதிவிட்டு வருகின்றனர். இதை ஒரு சேலஞ்ச் போல் அனைவரும் செய்து புகைப்படம் எடுத்து ஷேர் செய்து அதனை டிரெண்டாக்கி வருகின்றனர். அப்படி என்னதான் இந்த டல்கோனா காபியில் உள்ளது எனச் செய்துதான் பார்க்கலாமே..!

dalgona coffeeதேவையான சமையல் பொருட்கள் :

ப்ரூ அல்லது சன்ரைஸ் காபி தூள் – 2 தேக்கரண்டி.

சர்க்கரை – 2 தேக்கரண்டி.

சுடு தண்ணீர் – 2 தேக்கரண்டி.

பால் – 2 டம்ளர்..

செய்முறை :

சர்க்கரை மற்றும் காபித் தூளை ஒரு பாத்திரத்தில் கொட்டி  அதில் தண்ணீர் தேவையான அளவு  சேர்த்து 5 – 10  நிமிடங்கள் வரை கெட்டியாகும் வரை நன்கு கிளறவும். அதன் நிறம் மாறும் வரை நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

தற்போது கெட்டியான பதத்தில் கிரீம் போல் இருக்கும். இதைச் சூடாகவும் மற்றும் குளிர்ச்சியாகவும் பருகலாம்.

குளிர்ச்சியாக பருக நன்குக் காய்ச்சி குளிர்சாதன பெட்டியில்  வைத்த பாலை கிளாஸில் ஊற்றி அதன் மேல் இந்த காபி கிரீமை அழகாக டெகரேட் செய்யவும். அதன் மேல் கொஞ்சம் காபி பொடியைத் தூவி அலங்கரிக்கலாம்.

சூடாக பருக காய்ச்சிய பாலில் அப்படியே அந்த கிரீமை  பாலிற்கு மேல் நிரப்பிக் குடிக்கவும். இவ்வளவுதான் இந்த டல்கோனா காஃபி.

குறிப்பு :  குளிர்சாதனம் இல்லாமல் பனிக்கட்டிகளை  கிளாஸில் போட்டும் அதில் பால் ஊற்றி அதன் மேல் இந்த காபி கிரீமை போட்டுப் பருகலாம்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here