Home டெக்னாலஜிஸ் AUTOMATION ஆடி கார்கள் எப்படி தயாராகிறது என தெரியுமா ?

ஆடி கார்கள் எப்படி தயாராகிறது என தெரியுமா ?

492
0
audi production
Share

கார், பைக் என சந்தோசமாகச் சுற்றித்வந்த வாகன பிரியர்களை எல்லாம் வீட்டுக்குள் பூட்டிவிட்டது இந்த கொரோனா. இப்போது  நேஷனல் ஜியாக்ரஃபி, ஹிஸ்ட்ரி டிவி எல்லாம் வாகனம் சார்ந்த நிகழ்ச்சிகளைக் குறைத்துவிட்டனர். செய்வதறியாது தலையைப் பிய்த்துக்கொண்டிருந்த சில வாகன விரும்பிகளைக் மகிழ்விக்க ஆடி நிறுவனம் அவர்களது தொழிற்சாலையைச் சுற்றிக்காட்டுகிறது. அதுவும் சாதாரணமாக இல்லை. மிக பிரமாண்டமாக, நேரடி உரையாடலுடன் நிஜ மனிதர் உங்களுக்குத் தொழிற்சாலையைச் அருமையாக சுற்றிக் காட்டுகிறார்.audidevelopment

ஜெர்மனி நாட்டின் பவாரியா மாகாணத்தில் உள்ள 676 ஏக்கர் ஆடி தொழிற்சாலையை உங்களோடு உரையாடிக்கொண்டே சுற்றிக்காட்டுகிறார் ஆடி நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு நபர். கைகளில் வரையப்படும் கார் எவ்வாறு சாலைக்கு வருகிறது, எங்கே டெஸ்ட் செய்யப்படும், எப்படி பெயின்ட் அடிக்கிறார்கள், காரின் பாதுகாப்பை எப்படிச் சோதிக்கிறார்கள் போன்ற அனைத்து விஷயங்களையும் நேரலையில் காணலாம். இந்தப் புதிய முயற்சி ‘ஆடி ஸ்ட்ரீம்’ (Audi stream) என்ற பெயரில் வெளியாகியுள்ளது.audi samll

வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தே தொழிற்சாலையில் உற்பத்தி ஆகும் கார்களை டிஜிட்டல் வடிவில் காணலாம். வாடிக்கையாளர்கள் விர்ச்சுவல் வடிவில் காஸ்ட்லியான ஆடி காரின் உற்பத்தியைப் கண்டு அனுபவிக்க உதவுகிறது. அனுபவம் மிக்க வழிகாட்டிகள் விர்ச்சுவல் சுற்றுப்பயணத்தை ஒரு ஸ்டூடியோவிலிருந்தே  தங்களுக்கு நேரடியாக விவரிப்பார்கள். மேலும், வாகனத் தயாரிக்கும்  செயல்முறையைக் காணொலிக் காட்சிகள் மூலம் விளக்குவார்கள். கார் தயாரிப்பின் ஆரம்பம் முதல் இறுதி வரை எல்லா பாகங்களும் ஒன்றிணைக்கும் வரை வீடியோவில் தெளிவாக காண்பிக்கப்படும்.

இவை தவிர, விர்ச்சுவலாக வாகனத் தொழிற்சாலையில் சுற்றுலா வருபவர்களுக்கு, தங்கள் வழிகாட்டிகளுடன் பேசலாம். கார் தொடர்பான கேள்விகள் அனைத்திற்கும் அவர்கள் பதில் கூறுவார்கள்.audi media

ஆடி நிறுவனத்தின் இந்த நேரடி டூர் சுமார் 20 நிமிடங்கள் வரை இருக்கும். மேலும், சுற்றுலாவில் வழிகாட்டிகளாக உள்ளவர்கள், இந்த விர்ச்சுவல் சுற்றுலாவில் பங்கேற்பவர்களின் ஆர்வத்தை அடிப்படையாக கொண்டு  தொழிற்சாலை முழுவதும் சுற்றிக் காட்டுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் www.audi.stream வழியாக விர்ச்சுவல் வடிவில் ஆடி கார் தயாரிப்பதைக் காணலாம்.

இது இலவசம் என்றால் கூட இணையத்தில் முன்பதிவு செய்பவர்கள் மட்டும் தான் இதில் பங்கு பெற முடியும். ஆங்கிலம், ஜெர்மன், டச் போன்ற பல மொழிகளில் இருப்பதால் ஆங்கிலம் இருக்கும் நேரத்தைத் தேர்ந்தெடுத்து டிக்கெட் பெற்றுக் கொள்ளுங்கள். சப்டைட்டில் எல்லாம் கிடையாது. ஆடியைச் சுற்றிப்பார்க்க தயாரா ?


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here