Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள் சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயங்கும் நேரத்தை கண்டு அதிருப்தியான பயணிகள்!…

சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயங்கும் நேரத்தை கண்டு அதிருப்தியான பயணிகள்!…

343
0
Metro
Share

சென்னையில் வரும் 7ம் தேதி முதல் மெட்ரோ ரயில்கள் இயங்கும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது என்பதும் அதனை அடுத்து மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் நேற்று மாலை வெளியிடப்பட்டது என்பது தெரிந்ததே.

மெட்ரோ  ரயில்கள் அனைவரும் உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டுமென்றும் மாஸ்க் அணிந்த பயணிகள் மட்டுமே இரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்றும் வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பயணிகள் ஒருவருக்கொருவர் சமூக இடைவெளியுடன் பயணம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் முதல் கொரோனா விதிமுறைகளுடன் மெட்ரோ ரயில் சேவைகள் செயல்படுத்த முடிவு!…

இந்த நிலையில் சற்றுமுன் சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயங்கும் நேரம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி காலை 8.30 மணியிலிருந்து காலை 10.30 வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் அதன் பின்னர் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மெட்ரோ ரயில்கள் இயங்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில்கள் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பேருந்துகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படுவது போலவே மெட்ரோ ரயிலும் காலை 6 மணி முதல் இயக்க வேண்டும் என்றும் பயணிகள் தரப்பில் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here