Home செய்திகள் இந்தியா கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன உணவுகள் அளிக்கிறார்கள் என்ற விவரம் வெளியாகியுள்ளது…

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன உணவுகள் அளிக்கிறார்கள் என்ற விவரம் வெளியாகியுள்ளது…

378
0
Share

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தி மிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆகையால் மருத்துவமனை அளிக்கும் உணவுகள் பற்றிய தகவல்கள்  வெளிவந்துள்ளது.

இதுவரை உலகெங்கிலும் 5.30 லட்சம் பேர் கொரோனா  வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 35 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களைக் கண்டறிந்து மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.corona patients

இந்நிலையில் நோயாளிகளுக்குச் சத்தான உணவுகள்  அளித்தால் மட்டுமே அவர்களை விரைவாகக் குணப்படுத்த முடியும் என்று சொல்லப்படுகிறது.

தற்போது கொரோனா வைரஸ் (கோவிட் – 19) நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  அளிக்கப்படும் உணவுகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.

காலை 7 மணிக்கு  – இஞ்சி மற்றும் எலுமிச்சை போட்டுக் கொதிக்க வைத்த குடிநீர்

காலை 8.30 மணிக்கு  – 2 இட்லி (சாம்பார் மற்றும் வெங்காய சட்னி), சம்பா ரவை கோதுமை உப்மா, 2 முட்டை, பால், 1 டம்ளர் ஜூஸ்.

காலை 11 மணிக்கு  – சாத்துக்குடி ஜூஸ், இஞ்சி மற்றும் எலுமிச்சையோடு உப்புக் கலந்து கொதிக்க வைத்த  குடிநீர்.

மதியம் 1 மணிக்கு  – 2 சப்பாத்தி, புதினா சாதம் (1 கப்), வேகவைத்த காய்கறிகள் (1 கப்), பெப்பர் ரசம் (1 கப்), உடைத்த கடலை (1 கப்).

மாலை 3 மணிக்கு – மிளகு, மஞ்சள் சேர்த்த குடிநீர்.

மாலை 5 மணிக்கு  – கொண்டைக்கடலை சுண்டல்.

இரவு 8 மணிக்கு  – 2 சப்பாத்தி (ஆனியன் சட்னி) இட்லி அல்லது சம்பா கோதுவை ரவை உப்மா, 1 முட்டை.

இந்த சத்தான உணவுகள் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியை  அதிகரித்துக் குணப்படுத்தலாம்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here