Home செய்திகள் இந்தியா பிரிட்டன் பிரதமருக்கு கொரோனா வைரஸ் உறுதி..!

பிரிட்டன் பிரதமருக்கு கொரோனா வைரஸ் உறுதி..!

353
0
Jonhson
Britain's Prime Minister Boris Johnson speaks during a news conference on the ongoing situation with the coronavirus disease (COVID-19) in London, Britain March 16, 2020. Richard Pohle/Pool via REUTERS
Share

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் (கோவிட் – 19) பாதிப்பு அதிகரித்து  வரும் நிலையில் தற்போது பிரிட்டன் நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது  உறுதி  செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று பாரபட்சம் இன்றி அணைத்து  மக்களையும் தாக்கி வருகிறது. உலகம் முழுக்க இதுவரை 5.4 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.Corona

இந்த கொரோனா வைரஸ் (கோவிட் – 19) தொற்றால் சீனா, அமெரிக்கா,  ஐரோப்பிய, பிரிட்டன், இந்தியா, இத்தாலி என உலகின் ஏராளமான நாடுகள் மாபெரும் சவாலாக போராடிவருகிறது. பிரிட்டனில் மட்டும் இதுவரை 11 ஆயிரத்து 600 பேருக்கு  கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நாட்டில் 578 பேர் இந்த வைரசினால் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் கடந்த வாரத்தில் பிரிட்டன் இளவரசர்  சார்லசுக்கு இந்த வைரஸ் உறுதியானது. இவர் தற்போது  தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்று (27 ம் தேதி) பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு  கொரோனா வைரஸ்  தொற்று உறுதியாகி இருப்பதாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளார்.boris

இவர் வீடியோவில் கூறியிருப்பது:

எனக்கு சில நாட்களாக கொரோனா அறிகுறிகள் லேசாக  இருந்தது. இதனையடுத்து நான் பரிசோதனை செய்து கொண்டேன். இதில் கொரோன வைரஸ் தொற்று உறுதியாகி இருப்பதாக  மருத்துவர்கள் கூறினர். அதனால் நான் என்னை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறேன். மேலும் அரசு நிர்வாகத்தைத் தொடர்ந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் செய்து கொள்வேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார் .

பிரிட்டனில் பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.  தற்போது பிரதமர் நலம் பெற வேண்டி அனைவரும் பிரார்த்திக்கின்றனர்.

மற்ற நாட்டின் தலைவர்கள் அனைவரும் தற்போது  கொரோனாவின் பரவலை குறித்து மிகுந்த பயத்தில் மூழ்கியுள்ளனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here