Home செய்திகள் இந்தியா தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு !

தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு !

487
0
lockdown
Share

நாளையுடன் நாடு முழவதும்  ஊரடங்கு முடியும் நிலையில் உள்ளது. தற்போது தமிழகத்தில் மேலும் 15 நாட்கள் நீட்டிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே சில மாநிலங்கள் ஊரடங்கை ஏப்ரல் 30 வரை  நீடித்துள்ளனர்.talaimai

தமிழகத்தில் ஏற்கனவே  ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரிய அளவில் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது பற்றியும், கொரோனா வைரஸ் தொடர்பாக மாநிலங்கள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் ஏப்ரல் 11ம் தேதி இந்திய பிரதமரிடம் காணொலி மூலமாக பேசினார். அப்போது, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள், பற்றியும்  தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் எனவும் எடுத்துரைத்தேன் என்று கூறியுள்ளார்.janta curfew

மேலும், ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவினை நீட்டிக்க வேண்டும் என்றும் தெரிவித்தேன். நானும், மற்ற மாநில  முதல்வர்களும் கொரோனா பரவுதல் தடுப்பின் முதல் நடவடிக்கையான ஊரடங்கு உத்தரவினை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினோம். பிரதமர் ஆலோசனை கூட்டத்தின் நடவடிக்கை அடிப்படையிலும், உலக சுகாதார அமைப்பின் கருத்தின்படியும், மருத்துவ நிபுணர் குழு மற்றும் பொது சுகாதார வல்லுநர் குழுக்களின் பரிந்துரைகளின் படியும், மாநிலத்தில் ஊரடங்கை தளர்த்தினால், நோய் பரவல் வெகுவாக அதிகரிக்க கூடும் என்பதை கருத்தில் கொண்டும், பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் படியும், குற்றவியல் விசாரணை முறை சட்டப்பிரிவு 144ன் படியும், ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என்றும் சில சிறப்பம்சங்களையும் அறிவித்தார்.cm conference

* ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதால், தமிழகத்தில் உள்ள அணைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும்  மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும், நியாய விலைக் கடைகளில் விலையின்றி வழங்கப்படும்.

* கட்டடத் தொழிலாளர்கள் உட்பட பதிவு பெற்ற அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கும், குடும்ப அட்டை ஒன்றிற்க்கு இரண்டாவது முறையாக ரூ.1000 நிவாரண உதவி வழங்கப்படும்.

* மற்ற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு மே மாதத்திற்கான 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் என அனைத்தும் விலையின்றி வழங்கப்படும்.

* காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலான காலத்தில், பேக்கரி செயல்பட தடையில்லை என்றும், உணவகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின் படி பார்சல் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்படும்.

* சென்னை மாநகராட்சியில் உள்ள மக்களுக்கு, கொரோனா நோய் தொடர்பான தங்கள் சந்தேகங்களை தீர்வு  படுத்திகொள்ள டெலி மெடிசின் சொசைட்டி ஆப் இந்தியா நிறுவனத்தில் பதிவு பெற்ற சிறந்த டாக்டர்களை கொண்டு, தொலைபேசி  மருத்துவ முறை மூலம் தங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு தெளிவு பெற தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இவ்வாறு அந்த உத்தரவில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here