Home செய்திகள் இந்தியா டிரம்ப் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா – ட்விட்டரில் ட்ரெண்டிங்..

டிரம்ப் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா – ட்விட்டரில் ட்ரெண்டிங்..

334
0
Donald Trumph
Share

அமெரிக்க அதிபர் டோனல்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. எனவே அவர் குணமாக வரவேண்டி உலகம் முழுவதும் ஆதரவாளர்கள் மற்றும் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஹாஷ்டாக்களை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் உயிர் பயத்தை ஏற்படுத்திய கொரோனா தொற்று அமெரிக்காவை ஒரு வழி செய்து விட்டது. அமெரிக்காவில் கொரோனா நோய் தொற்று எண்ணிக்கை மற்றும் கொரோனவால் உயிரிழந்தவர் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. தற்போது நவ.,03ல் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்; ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார் .

தேர்தல் வர இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் தீவிர பிரச்சாரத்தில் இருதரப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு பக்கம் கொரோனா பேரலை காரணமாக உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் டிரம்பின் நெருங்கிய ஆலோசகராக இருக்கும் ஹோப் ஹிக்ஸ் என்பவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகினார். அவரைத் தொடர்ந்து டிரம்ப் மற்றும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. இருவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் இருவருமே தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அந்நாட்டில் உள்ள டிரம்ப் ஆதரவாளர்களும், உலகம் முழுவதும் உள்ள தலைவர்களும் டிரம்பிற்க்கு ஆறுதல் தரும் வகையில் டிவெட்டரில் #DonaldTrump, #TrumpHasCovid, #Melania, #Mr.President, #trumptestspositive என்ற ஹாஷ்டாக் கொண்டு ரீட்வீட் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். பிரதமர் மோடி உட்பட அனைவரும் இதில் ரீட்வீட் செய்து அவர் குணமாக வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர். அதேசமயம் அவருக்கு எதிராக மீம்ஸ்கள் பரவலாக ட்ரெண்ட் ஆகி வருகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here