Home அரசாங்க வேலை TNPSC TNPSC Group 1 தேர்வுகள் வரிசையாக நடைபெற உள்ளது.

TNPSC Group 1 தேர்வுகள் வரிசையாக நடைபெற உள்ளது.

383
0
TNPSC Annual Planner 2020-21
Share

துணை கலெக்டர் உட்பட 69 காலியிடங்களுக்கான &குரூப் – 1& தேர்வு ஜனவரியில் நடத்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

குரூப் – 4& பதவிகளில் அடங்கிய காலியிடங்களை நிரப்பு வதற்கான போட்டித் தேர்வு 2019 செப். 1ல் நடந்தது. இதன் முடிவுகள் 2019 டிசம்பரில் வெளியிட பட்டன. இதில் தேர்ச்சி பெற்றவர்களில் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பதவிகளை நிரப்ப அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் மார்ச்சில் நடப்பதாக இருந்தது. ஆனால் கொரோனா நோய் பரவலால் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தட்டச்சர் பதவிக்கு நவ. 2 முதல்; சுருக்கெழுத்தர் தேர்வுக்கு நவ. 28 முதல் சான்றிதழ் சரிபார்ப்பும் கவுன்சிலிங்கும் நடத்தப்படும்.அதேபோல் துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி. உட்பட பல்வேறு &’குரூப் – 1&’ பதவிகளில் 69 காலியிடங்களை நிரப்புவதற்கான முதல் நிலைத் தேர்வு 2020 ஏப். 5ல் நடப்பதாக இருந்தது. தள்ளி வைக்கப்பட்ட இந்தத் தேர்வு 2021 ஜனவரி 3ல் நடத்தப்படும்.

தமிழ்நாடு தொழிற்சாலைப் பணிகளில் உதவி இயக்குனர் மற்றும் உதவி கண்காணிப்பாளர் பணிகளுக்கான தேர்வு ஏப். 25ல் நடப்பதாக இருந்து தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வு ஜன. 9, 10ல் நடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here