Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள் தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பா ?

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பா ?

350
0
K.p.anbzhagan
Share

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்தும் மார்ச் 22 முதல் மூடப்பட்டது. மேலும் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தற்போது நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா பாதிப்பு  அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 82000க்கும் அதிகமானோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதில் 2700 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் இந்தியாவில் கொரோனா பாதிப்பில் 2வது இடத்தில் உள்ளது. மொத்தம் கிட்டத்தட்ட 10000 பேர் பாதிப்படைந்துள்ளனர். ஆனால் இறப்பு எண்ணிக்கை குறைவு தான்.
இந்த ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தப்பட்டு  வருகிறது. மேலும் வரும் ஜூன் மாதத்தில் 10 -ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்று மாணவர்கள் ஆவலுடன் இருந்தனர்.
ஆனால், `தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முழுமையாக முடிந்த பின்பே கல்லூரிகள் திறக்கப்படும்’ என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்குப் பயம் இல்லை என்ற நிலை வந்த பிறகே கல்லூரிகள் வழக்கம் போல் இயங்க திறக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர், ஒரு சில  கல்லூரிகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் சென்ற பிறகு தூய்மைப்படுத்தும் பணிகள் நடக்கும் என்றார்.
ஆனால் தேர்வு குறித்து எந்த அறிவிப்பும் தெரிவிக்கவில்லை.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here