Home செய்திகள் இந்தியா ரூ.20 லட்சம் கோடி பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் 2-ம் கட்ட அறிவிப்புகள் ! நிர்மலா சீதாராமன்  வெளியிட்டுள்ளார்..

ரூ.20 லட்சம் கோடி பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் 2-ம் கட்ட அறிவிப்புகள் ! நிர்மலா சீதாராமன்  வெளியிட்டுள்ளார்..

454
0
finance minister
Share

பிரதமரின் ரூ.20 லட்சம் கோடி பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2-ம்  கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். புலம்பெயர் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், சிறு விவசாயிகள் ஆகியோருக்கு 9 புதிய  திட்டங்கள்.
நேற்று (மே 13)  பிரதமரின் ஆத்மனிர்பார் பாரத் அபியான்’ என்ற  திட்டத்தின் கீழ் ஒதுக்கிய ரூ. 20 லட்சம் கோடி  ஒதுக்கிய நிதிக்கான திட்டங்கள் அறிவித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் இன்று 2 -ம் கட்ட திட்டங்கள் வெளியிட்டுள்ளார்.finance minister
இதில் விவசாயிகள், புலம் பெயர் தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் ஆகியோருக்காக 9 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட அறிவிப்பு குறித்து செய்தியாளர்களிடம் இன்று  பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விவசாயத்துக்காகச் சென்ற மார்ச் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை மட்டும் 86,600 கோடி ரூபாய் மதிப்பில் 63 லட்சம் வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
3 கோடி விவசாயிகளுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் வரை கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. நகர்ப்புற ஏழை மக்களுக்கு உதவ 7,200 சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் வேலைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு ஊரக வளர்ச்சித்துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலைத் திட்டத்தின் மூலம் சொந்த ஊர் திரும்பிய புலம் பெயர் தொழிலாளர்களை பணியமர்த்தும் வேலைகள் வேகமாக  நடைபெற்று வருகிறது.
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் நபார்ட் வங்கி மூலம் கூட்டுறவு மற்றும் கிராமப் புற வங்கிகளுக்கு 29,500 கோடி ரூபாய்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்கவும், தங்குமிடம் அமைக்கவும் மாநிலங்கள் வாயிலாக 11,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கான வட்டி மே 31 வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மே மாதத்தில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர். கிட்டத்தட்ட 12,000 சுய உதவிக் குழுக்கள் மூலமாக 3 கோடி முகக் கவசங்கள் வரை தயாரிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கில் 100 நாள் வேலைத் திட்டத்துக்காக மட்டும் 10,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. சொந்த ஊர் சென்றுள்ள புலம் பெயர் தொழிலாளர்களுக்கு அங்கே புதிய வேலை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here