Home செய்திகள் இந்தியா கல்லூரி தேர்வுகள் ரத்தா ? UGC திட்டம்..

கல்லூரி தேர்வுகள் ரத்தா ? UGC திட்டம்..

487
0
UGC
Share

கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் கல்லூரிகள் திறக்கவில்லை. மேலும் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின்  ஆகிய பொதுத் தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டு இறுதியில் ரத்து செய்யப்பட்டன.
அது மட்டுமின்றி சில முக்கிய கல்லூரிகளில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது. தற்போது இந்த கொரோனா வைரஸிற்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்று நிலை தெரியாமல் உள்ளது. இத்தகைய சூழலில் பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் பருவத்தேர்வு இன்னும் நடத்தப்படவில்லை.
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் மட்டும் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் இதற்கு முன்பு நடைபெற்ற பருவத்தேர்வில் எடுத்த மதிப்பெண்ணைக் கணக்கிட்டு இந்த பருவ தேர்விற்கு மதிப்பெண் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மற்ற பல்கலைக் கழகங்கள் இன்னும் தேர்வைத் தள்ளி வைத்துள்ளன, அது மட்டுமின்றி தேர்வு தேதிகளும் அறிவிக்கப்படாமல் உள்ளது.
இது குறித்து ஏற்கனவே உயர் கல்வித்துறை அமைச்சர் கே. பி  அன்பழகன்  இடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் முதலமைச்சரின் ஆலோசனைகளும், கல்வியாளர்களின் ஆலோசனையுடன் பல்கலைக்கழகத் தேர்வுகளில் சிறந்த முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போது திருவாரூர் பல்கலைக் கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் ஆகிய  மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்வது குறித்து UGC  புதிய வழிமுறை தொகுக்க  ஆலோசனை நடத்துகிறது. கூடிய விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று UGC தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here