Home முகப்பு உலக செய்திகள் ரத்து செய்த ஈரான் – இந்தியாவுடனான ஒப்பந்தங்களை! – சீனாவின் தூண்டுதல் காரணமா?..

ரத்து செய்த ஈரான் – இந்தியாவுடனான ஒப்பந்தங்களை! – சீனாவின் தூண்டுதல் காரணமா?..

323
0
Canceled Iran-Agreements with India
Share

சமீபத்தில் சீன செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட நிலையில், இந்தியாவுடனான ஒப்பந்தத்தை ஈரான் ரத்து செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் துறைமுக சபஹாரிலிருந்து ஆப்கானிஸ்தான் வரை ரயில்வே பாதை அமைக்க இந்தியாவுடன் ஈரான் ஒப்பந்தம் செய்திருந்தது. 2016ம் ஆண்டு இந்த ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், நான்கு ஆண்டுகளாக இந்த திட்டத்திற்கான எந்த நிதியையும் இந்தியா வழங்கவில்லை என கூறி இந்த திட்டத்தை ரத்து செய்துள்ளது ஈரான்.

அதேசமயம் சீனாவுடன் 30 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார ஒப்பந்தத்தை ஈரான் மேற்கொண்டுள்ளது. இலங்கையிலும், இந்தியாவுடனான கொழும்பு துறைமுக திட்டத்தை மறுபரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இரு நாடுகளும் சீனாவுடன் பொருளாதார உறவில் நெருக்கத்தில் உள்ளவை என்பதால் சீனாவின் தூண்டுதல் பேரில் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுகின்றனவா என உலக அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here