Home செய்திகள் இந்தியா சச்சின் 2 படம் எடுக்கத் திட்டமா ?

சச்சின் 2 படம் எடுக்கத் திட்டமா ?

429
0
vijay
Share

ஹாலிவுட் படங்கள் பல பாகங்களாக வெளியாவது வழக்கம். அதே போல் இந்தியாவில் தமிழ்த் திரைப்படங்களும் தற்போது இரண்டாம், மூன்றாம் பாகங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதிலும் மிகப்பெரிய நடிகர்களான ரஜினிகாந்த், அஜித், கமல்ஹாசன், விஷால், விக்ரம், சூர்யா என முன்னணி கதாநாயகர்கள் இரண்டாம் பாகங்கள் படத்தில் நடிக்கின்றனர்.

எடுத்துக்காட்டாக ரஜினி நடித்த எந்திரன் படம் இரண்டாம் பாகமாக 2.0 என வெளிவந்தது.
கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் படம் விஸ்வரூபம்-2 என்று வெளிவந்தது. மேலும் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட நடித்து வருகிறார்.
விஷால் சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகம் எடுத்து வெளியிட்டுள்ளார்.
சூர்யா சிங்கம் படத்தை 1,2,3 என மூன்று பாகங்கள் வெளிவந்துள்ளது.
நடிகர் விக்ரம் சாமி படத்தை இரண்டாம் பாகம் நடித்து வெளியிட்டுள்ளார்.

இப்படி இருக்க விஜய் படங்களின் இரண்டாம் பாகம் வெளி வரவில்லையே என அவர்கள் ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்குத் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க ஏ ஆர் முருகதாஸ் தயாராக இருப்பதாகவும் அதில் விஜய் நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. அதே போல் ஒரு சிலர் முதல்வன் 2 படத்தில் விஜய் நடிக்க வாய்ப்பு உள்ளதாகச் செய்திகள் வெளிவந்தன.

இப்படி இருக்க தற்போது விஜய் நடித்து வெளியான சச்சின் படம் இரண்டாம் பாகம் வெளிவருமா என்று அந்த படத்தின் டைரக்டர் ஜான் மகேந்திரனிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்கு அவர் தெரிவித்திருப்பதாவது :

சச்சின் படத்தை ரசிகர்கள் இப்போதும் விரும்புகின்றனர். அதன் இரண்டாம் பாகம் எடுக்க நான் தயாராக இருக்கிறேன். அது நடக்க நடிகர் விஜய் வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் நிறைவேறும் என்று கூறியுள்ளார்.

சச்சின் படம் 2005ஆம் ஆண்டு வெளியானது இதில் விஜய் கல்லூரி மாணவராக நடித்திருப்பார் இந்த படத்தின் கதாநாயகியாக ஜெனிலியா நடித்து இருந்தார். இந்த படம் பன்மொழி படமாக வெளிவந்தது. தமிழ் தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளில் வெளியானது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here