Home செய்திகள் இந்தியா கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த தானம்… குணமடைந்தவர் செய்த ஆச்சரியம்!

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த தானம்… குணமடைந்தவர் செய்த ஆச்சரியம்!

392
0
corona virus safety
Share

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுக்  குணமடைந்தவர் தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தன் இரத்தத்தைத் தானமாக வழங்கினார்.

இப்போது உலகெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கும் ஒரே பெயர் ‘கொரோனா’. மனித இனத்தையே  ஆட்டிப்படைத்து கிட்டத்தட்ட 60,000 உயிர்களைப் பலி கொண்டு இன்னும் பல்லாயிரம் உயிர்களுக்குப் பயத்தை  ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இந்தக் கண்களுக்குத் தெரியாத கொடூர வைரஸ் உலகம் முழுக்க இதுவரை 110000ற்கும் அதிகமான மக்கள் பாதிப்பிற்குள்ளாகி  சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 2, 38,923 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு விட்டனர்.Corona

இப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுக்  குணமடைந்துள்ள  நியூயார்க்கைச் சேர்ந்த ஒரு தாய் தற்போது சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு உதவி செய்துள்ளார். உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிகமாக 300000 பேர் வரை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக நியூயார்க் நகரம் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. தற்போது அந்த நகரத்தை சேர்ந்த டிஃப்பனி பிங்க்னி என்ற பெண் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்துள்ளார். இவர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்களுக்கு தன் ரத்தத்தைத் தானமாக வழங்கியுள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here