Home செய்திகள் இந்தியா ஊரடங்கு உத்தரவு ! பாராட்டிய உலக சுகாதார அமைப்பின் தூதர்….

ஊரடங்கு உத்தரவு ! பாராட்டிய உலக சுகாதார அமைப்பின் தூதர்….

341
0
David nabaro
Share

“கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க இந்திய அரசு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு , மிக தைரியமான நடவடிக்கை என ” என உலக சுகாதார அமைப்பின் சிறப்பு தூதர் டேவிட் நபாரோ பாராட்டினார்.

இந்தியாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு , அதிகரித்துக் கொண்டே செல்வதால் வைரஸ் பரவுதலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர, மத்திய – மாநில அரசுகள், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருகின்றது. இதன் முதல் கட்டமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அவரவர் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

உலக சுகாதார அமைப்பிற்கான சிறப்பு தூதர், டேவிட் நபாரோ, இந்திய அரசின் இந்நடவடிக்கைக்குப் பாராட்டு  தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது : கொரோனா வைரஸ், அதிவேகமாகப் பரவும் தொற்றாகும். எனவே , இந்த வைரசினால் பாதிப்பிற்குள்ளான மக்களை உடனடியாக கண்டறிந்து, அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும். அதனைத் தொடர்ந்து, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து, அவர்களையும் தனிமைப்படுத்தி வைக்கவேண்டும். இதையடுத்து, பாதிப்பிற்குள்ளான நாடுகள், வைரஸ் பரவலைத் தடுக்க, ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். அதன் மூலம் தான், மக்களால் சமூக இடைவெளியைப் பின்பற்ற முடியும். இந்தியாவில், இந்த நடவடிக்கை, சரியான நேரத்தில் எடுக்கப்பட்டது.வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, குறைந்த எண்ணிக்கையில் இருந்தபோதே, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இது மிகச் சரியான முடிவு.Who

சமூக விலகலை கடைப்பிடிக்காமல் இருந்தால், வைரசின்  பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதை இந்திய மக்கள் அறிந்துகொண்டனர்.  இந்திய அரசின் இந்நடவடிக்கைக்கு, பல்வேறு  விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் என்பதை தெரிந்தும், மிக தைரியமாக, அரசு மேற்கொண்டுள்ள இந்நடவடிக்கைக்கு, நான் பாராட்டுகிறேன். இந்தியா, இந்த கொரோனா விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாகச் செயல்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன், புதிய பாதிப்புகள் ஏதும் ஏற்படாது என நான் நம்புகிறேன். பிற நாட்டுடன் இந்தியாவை ஒப்பிட்டுப் பார்ப்பதால், எந்த பலனும் இல்லை. கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருந்த சில பெரிய  நாடுகள், கொரோனா வைரசால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதை நான் தற்போது கண்டு வேதனை அடைகிறேன். அங்கு, பணியாற்றிய பல சுகாதார ஊழியர்களும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதை நான் பார்க்கிறேன்.

கொரோனா வைரசின் தன்மை குறித்து, நாம் அறிய இயலாது. வைரஸ் பரவுதல் குறையுமா அல்லது மேலும் அதிகரிக்குமா  என்பதை, வரும் காலம் தான் காணமுடியும். நாம் அறிந்தவரை, இந்த வைரஸ், கடந்த  நான்கு மாத காலமாகப் பரவி வருகிறது. வெயில் காலத்தில், இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பது நமக்குத் தெரியாது. இந்தியாவில் தற்போது வெயில் காலம் ஆரம்பமாகிறது. ஆகையால், அங்கு என்ன நடக்கும் என்பதை அறிந்துகொள்ள ஆவலுடன்  இருக்கிறேன். நிலைமை மோசமாக மாறாது என நான் நம்புகிறேன். வரும் வெயில் காலம், இந்தியாவிற்கு ஆதரவு அளிக்கும் என்று நினைக்கிறேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here