Home லைஃப் ஸ்டைல் ஆரோக்கியம் எலுமிச்சை தோலில் உள்ள அழகு குறிப்புகள் : எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா ?

எலுமிச்சை தோலில் உள்ள அழகு குறிப்புகள் : எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா ?

1752
0
Lemon
Share

நம் உடலிற்கு குளிர்ச்சி அளிக்க எலுமிச்சை சாறு பருகுகிறோம். பின்பு அந்த தோலை தூக்கி எறிகிறோம். ஆனால் அந்த தோலை நன்கு காயவைத்து பொடியாக்கி கொண்டால் ஏராளமான அழகு குறிப்புகள் செய்து நம் முகத்திற்கு பொலிவு பெற செய்யலாம்.lemon peel

அது எப்படி எல்லாம் உபயோகப்படுத்த வேண்டும் என கீழே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

தயிர் : எலுமிச்சை பவுடரை தயிருடன் நன்றாகக் சேர்த்து முகத்தில் முழுவதும் செலுத்த வேண்டும். இதனால் முகத்தில் உள்ள சூரியக் கருமை முழுவதும் நீங்கி முகம் பளிச்சிடும்.

கிரீன் டீ இலை : இந்த  எலுமிச்சை பவுடருடன் 1/4 தேக்கரண்டி கிரீன் டீ இலை மற்றும் கொஞ்சம் தேன் இவை மூன்றயும் ஒன்றாக கலந்து கெட்டியான பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள். அதை முகத்தில் செலுத்தி 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இது முகத்தை குளுர்ச்சியடைய செய்து எண்ணெய் பிசுபிசுப்பு, முகப்பருக்களை அடியோடு அழிக்கும்.lemon peel powder

கடலை மாவு : கடலை மாவு மற்றும் எலுமிச்சை பவுடர் இவை இரண்டையும் சம அளவில் எடுத்துக்கொண்டு ஒன்றாக சேர்த்து முகத்தில் செலுத்தி காய்ந்ததும் கழுவுங்கள். இதனால் எண்ணெய் சுரப்பது குறையும், டல்லான முகமும் பளிச்சென ஆகும்.

சந்தனம் : எலுமிச்சை பவுடர், சந்தனம் மற்றும் கற்றாழை மூன்றையும் நன்கு சேர்த்து கெட்டியாக பேஸ்ட் போல் கலந்து முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள். இதனை வறண்ட சருமத்தினர் பயன்படுத்தினால்  ஈரப்பதம் கிடைத்து சருமம் மென்மையாக மாறும்.

ஓட்ஸ் : ஒட்ஸ் பவுடர், எலுமிச்சை பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர் மூன்றையும் நன்கு கலந்து பேஸ்ட் போல் மாற்றி முகத்தில் செலுத்தில் 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இது முகத்தில் உள்ள இறந்த செல்கள், அழுக்குகளை நீக்கி சருமத்துகள்களுக்கு சுவாசம் கிடைக்க செய்கிறது. இதனால் சருமம் புதுப்பொலிவுடன் ஜொலிக்கும்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here